நவம்பர் 2004ல் துவஙப்பட்ட இயக்கம்,

* மின் கட்டண உயர்வுக்கனா மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களுக்கு முன்பாக மின் வாரியத்தின் கணக்குகள் குறித்து பரப்புரையை வெளியிட்டு வ்ந்துள்ளது. கட்டண உயர்வுக்கு காரணமான தனியார் மின்சாரம் கொள்முதலே காரணம் என்பதனை புள்ளி விவரங்களுடன் தெளிவு படுத்தி வந்துள்ளது.2014 ல் ஆணையத்தின் ஒரு உறுப்பினரும் இதனை ஒப்புக் கொண்டுள்ளர்.

*தனியார் மின் உற்பத்தியாளர்களின் நேர்மை யற்ற நடவடிக்கைகள் குறித்து வாரியத்திடமும், ஆணையத்திடமும் முறையிட்டும் ,வழக்கு தொடுத்தும் செயல்பட்டுவருகிறது.உதாரணமாக ,

Arkay energy (Rameswaram) ltd கோரிய சுய உற்பத்தியாளர் களுக்கன சலுகைகள் (123 கோடி).

GMR மற்றும் PPN நிறுவனங்கள் உயர் நீதி மன்ற தடைக்கு எதிராக 500 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கில் குறுக்கிட்டு மக்கள் சார்பாக வழக்காடியது

காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு மக்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் பல சலுகைகள் குறித்த வழக்கு (banking)

2012ம் ஆண்டில் மின்கட்டணம் உயர்த்தப் பட்டவுடனேயே 6833 மில்லியன் யூனிட் மின்சாரம் அதிகவிலைக்கு ( ரூ6.40/யூனிட்) கொள்முதல் செய்ய முயன்றது மின் வாரியம்.இதில் இவ்வியக்கம் குறுக்கிட்டு வழக்கு தொடர்ந்தது. இதன் பிறகு யூனிட் ரூ5.50க்கு குறைந்து போனது.

* ஆணையம் 13 வழக்குகளில் வழங்கிய தவறனா உத்திரவுகளில் உள்ள முறைகேடுகளால் வாரியத்திற்கு ஏற்பட்ட 6000 கோடி நட்டம் குறித்து ஆளுனர் ,முதல்வர் அவர்களிடம் முறையிட்டுள்ளது.

*2006 தொடங்கி 2011 வரையிலனா காலத்தில் 10 தனியர் உற்பத்தி யாளார்களுடனான வணிகத்தை ஆய்வு செய்து ,இதில் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள 24,309கோடி இழப்பு குறித்து முறையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

* சிறு,,குறு தொழில்களனா விசைத்தறி யாளார்கள் மின் கணக்கிட்டில் ஏற்பட்ட குழப்பத்தில் ஆலோசனை வழங்கி தீர்வு கண்டது

* 30 ஆண்டுகளுக்கு மின்சாரம் கிடைக்கமல் இருந்த முந்தல் முனை என்ற மீனவர் கிராம மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க உதவியது

* உடுமலை, பொள்ளாச்சி பகுதியில் விவசாயத்தோட்டங்களில் உள்ள கோழி வளர்ப்பு பண்ணை களுக்கு வழங்கப் பட்ட தண்டணை கட்டணத்தை தள்ளுபடி செய்ய உதவியது.

* ஆணையத்திற்கு நீதித்துறையை சார்ந்த வரை நியமிக்க கோரி 2010ல் உயர் நீதிமன்றதில் வழக்கு தொடுத்துள்ளது.

* காற்றாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகை மின்சாரச் சட்டதில் இல்லாததகும்.இதனால் ஆண்டுக்கு 650 கோடி இழப்பு குறித்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது

* மரபுசார மின்சாரக் கட்டண நிர்ணயத்தில் மக்கள் கருத்து கேட்கும் வாய்ப்பை ஆணையம் தன்னிச்சையக ரத்து செய்தது. இதனை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்காடி வருகிறது.

* மக்கள் மின்சாரம்,மற்றும் அதன் தொடர்பன அரசியல் குறித்து அறிந்து கொள்ள கீழ்கண்ட புத்தகங்களை வெளீயீட்டுள்ளது.

1* தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும்காரணமும், தீர்வும்

2*தமிழக அரசின் சூரிய மின் கொள்கை—ஒர் ஆய்வு

3* மக்களின் தேர்தல் அறிக்கை

4* தனியாரின் ஆடுகளம்மின் வாரியத்தில் காணமல் போன 24,309 கோடி