1) தமிழக அரசு 05.12.2014 அன்று அதிக வவிலை தனியாரிடமிருந்து யூனிட் ரூ.12.50 வீதம் 29.50 மில்லியன் யூனிட் (295 கோடி) மட்டுமே வாங்கப்பட்டதாகவிம், இது மொத்த மின் தேவையில் மூன்று சதம் மட்டுமே என்று தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தாண்டு மின் தேவை வளர்ச்சி 20 சதமிருக்குமென்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மூன்று சத மின்சாரம் தான் தற்போதைய 15 சத மின்கட்டண உயர்வுக்கு காரணியாகியுள்ளதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 295 கோடி யூட் கொள் முதல்விலை 3687.5 கோடியாகும். இது பயனீட்டாளர் முனையில் 5512.8 கோடியாகி விடும். ஆனால் இந்த மின்சாரத்தின் விற்று வரவோ 1220 கேடிதான். ஆக நண்டம் 4293 கோடி இன்றைய 15 சத மின் கட்டண உயர்வில் 82 சதம் இந்த கொள்முதலைத் தவிர்க்க மாநில அரசு மிகவும் தயங்குகிறது. இது தொருமேயானால், ஆண்டுதோறும் 15 சத மின் கட்டண உயர்வு தவிர்க்க இயலாததாகிவிடும். இந்த அதிகவிலைக் கொள்முதலை உடனடியாக நிறுத்திட அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

2) அரசு குறிப்பிடும் 20 சத மின் தேவை வளர்ச்சி, வர இருக்கின்ற கோடையில் படுமோசமாக தமிழகத்தை பாதிக்கும். ஆனால் நீண்டகால எதிர்பார்பிற்கு பிறகு 2014-ல் துவங்கப்பட்ட மேட்டூர் 600 மெ.வா.வடசென்னை 1200 மெ.வா. வல்லூர்1500 (1041) மெ.வா. நிலையங்களின் உற்பத்தி படுமோசமாகவுள்ளதை அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். குறிப்பாகமேட்டூர் 600 மெ.வா.க்கு பதிலாக 400 மெ.வா. மட்டுமே உற்பத்தி செய்யமுடிகிறது. துவங்கப்பட்ட மூன்று மாதத்திற்குள்ளாகவே 05.02.2014- லிருந்து 10.07.2014 வரை ஐந்து மாதகாலம் முழுமையாக முடங்கிவிட்டது. இந்த நிலையத்திலிருந்து ஒவ்வொரு நாளும் ஐந்து மி.யூ உற்பத்தி குறைகிறது. (ஆண்டுக்கு 1500 மி.யூ அதிகவிலை மின்சாரத்தில் பாதி) 2009ஆம் ஆண்டிலிருந்து அரசுக்கு தொடர்ந்து இது குறித்து தெரிவித்தும் ஏனோ நடவடிக்கையில்லை மேட்டூரின் ஒப்பந்தரான BGR வழுதூர் 2, (92) நிலையம் துவக்கப்பட்ட உத்திரவாத காலத்திலேயே பழுதடைந்து 485 நாட்கள் உற்பத்தி இல்லாது போயிற்று. எனினும் இந்நிறுவனம், வாரியத்தில் உள்ள செல்வாக்கு காரணமாக, அனைத்து ஒப்பந்த தொகையையும் பெற்றுவிட்டது. தண்டத்தீர்வையே (2568+500) 3068 கோடி இருக்கும் பொழுது இது அதிசயமானது. அது போன்றே வடசென்னை முதல் அலகும் முடங்கியுள்ளது. ஒப்பந்தரான BHEL நிறுவனம், ஒப்பந்தம் வழங்கயி மின் வாரிய அதிகாரிகளை உதாசினப்படுத்துவதாக அறியமுடிகிறது.

வல்லூர் 1500 மெ.வா கூட்டு முயற்சியில் 1000 மெகாவட் உற்பத்தியே செய்யப்படுகிறது. மூன்றாவது அலகு இன்றும் உற்பத்தி துவங்கவில்லை. இருக்கும் இரு அலகுகளில் ஒன்று அடிக்கடி நிறுத்தப்படுகிறது. எனவே புதிய உற்பத்தி நிலையங்களை முழு உற்பத்தி க்கு உடனே கொண்டுவரவும். அவர்களிடம் இழப்பீட்டை உடனடியாக பெறுவதன் மூலம், மின் கட்டண உயர்வைத் தவிர்க்கவும், அரசை கேட்டுக்கொள்கிறோம்.

3) தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், அதிகாரப்போட்டி காரணமாக குழப்பத்தில் உள்ளது. அதிக விலை மின்சாரத்தை வாங்க வேண்டாம் என்ற உத்திரவை மின்வாரியம் கேட்கவில்லை என்று குறிப்பிட்டும். ஆணைய உறுப்பினர் 2012-ம் ஆண்டுகளில் இந்த கொள்முதலுக்கு அனுமதியும் வழங்கியுள்ளார். இது போன்ற பல மின்கொள்முதலுக்கு அனுமதியும் வழங்கியுள்ளார். இது போன்ற பல மின்கொள்முதலுக்கு பரிசீலனையின்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டிலிருந்து மின் வாரியம் செய்துள்ள பலமுறை கேடுகளுக்கு ஆணையமும் துணை போயிருக்கிறது. இது குறித்து 2006-லிருந்து தெரிவித்து பத்துக்குமேற்பட்ட புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதனையும் அரசுக்கு வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறோம். 2006-ம் ஆண்டிலிருந்து ஆணையத்தில் பணியாற்றிய அனைத்து உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து, பாரபட்சமற்ற விசாரணை நடத்திட அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

4) தேசிய அளவில் புதிய மின் நிலையங்கள் அமைப்பதற்கு பதிலாக, இருக்கும் நிலையங்கள் கையகப்படுத்தும் நிலையே காணப்படுகிறது. எனவே எதிர்வரும் கடும் மின்பற்றாக்குறையைச் சந்திக்க, இந்த அணுகுமுறையைக் கைகொள்ள வேண்டுகிறோம். இதன்மூலம்

வல்லூர்

450 மெ.வா

1266 கோடி

NLC –TNEBJV தூத்துக்குடி

613 மெ.வா

1440 கோடி

NLC மின்நிலையம்

1315 மெ.வா

N.A

மொத்தம் 2378 மெ.வா

இரு மாநில நீரோட்டத்தையே தங்கள் வளமாகவும், தமிழகத்தின் உரிமையை மறுக்கும், கேரள கர்நாடக அரசுகளுக்கு, தமிழகத்தின் அரிய வளமான நெய்வேலி நிலக்கரியில் பங்கு வைப்பதை இதன் மூலம் தடுக்க முடியும்.

5) தனியார் மின் நிலையங்கள், நடுவன பொதுத் துறை மின் நிலையங்கள், தமிழகத்தின் சுற்றுச்சூழலையும், நிலம், நீர், கடல் வளம், பொதுச் சுகாதாரத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பினை ஈடுகட்ட இவர்கள் விற்கும் மின்சாரத்தில் யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் வரிவிதிக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − one =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>