shadow

நடுவன அரசு விவசாயிகளுக் கு எதிரனது என்றும் நிறுவனங்களுக்கே அதிக அக்கறைக் காட்டி வருவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆளும் கட்சியோ எதிர்கட்சிகள் பிரச்சனை யை திசை திருப்புவதாக மறுத்து வருகிறது. உண்மை என்ன என்பதனை நாம் அறிந்துகொள்ள உ.பி மாநிலம் நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது.

மே 27 அன்று அலகபாத் உயர்நீதிமன்றம் , உத்திரபிரதேசத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் ஜூன் 15 ந் தேதிக்குள் விவசாயிகளுக்குச் சேர, வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையில் 25% விழுக்காட்டைத் தர வேண்டுமென உத்திரவிட்டுள்ளது. இந்த 25 சதம் என்பது 2400 கோடியாகும். மேலும் 25 விழுக்காட்டை ஜுன்30 ந்தேதியன்றும் அடுத்த 25 விழுக்காட்டை ஜுலை 15 லும் தர கெடு விதித்துள்ளது. அவ்வாறு தரத் தவறினால் முதல் தகவல் அறிக்கை யை பதிவு செய்யப்படும் எனவும் சொல்லியுள்ளது.

25 விழுக்காடு நிலுவை யான 2400கோடியில் 2166 கோடியை தனியார் சர்க்கரை ஆலைகளே தரவேண்டியுள்ளன.. மொத்தமாக தனியாரிடமிருந்து வரவேண்டிய நிலுவையான 8666 கோடியில் நாட்டின் மிகப் பெரிய சர்க்கரை நிறுவனங்களான பஜாஜ் இந்துஸ்தான், பல்ராம்பூர் சின்னி, EID PARRY, போன்ற நிறுவனங்களே 7356கோடியைத் தர வேண்டியுள்ளது.. இது உத்திர பிரதேசத்தில் மட்டுக்குமான கதை. நாடு முழுவதும் விவசாயிகளுக்குச் சேரவேண்டிய கரும்புக்கான நிலுவை யென்பது 21000 கோடியென செய்திகள் சொல்லுகின்றன.

விவசாயிகள் கரும்பை சர்க்கரை ஆலைகளுக்கு தந்து விட்டு ‘’ காசு’’ க்காக காத்திருக் கின்றனர். ஆனால் சர்க்கரை உற்பத்தி கூடிவிட்டதால் விலையில்லை என்று விவசாயிகளுக்கு ‘’பெப்பே’’ காட்டுகின்றன சர்க்கரை ஆலைகள்.. இதில் நம்ப ஊர் ஆலைகளனா சக்தி சர்க்கரை, ரேணுகாசர்க்கரை,பண்னாரி அம்மன் ,நிறுவனங்களும் அடங்கும்.. நாட்டின் மொத்த தேவை 24 மில்லியன் டன் எனவும் இந்த ஆண்டு உற்பத்தி 28 மில்லியன் டன்னைத் தாண்டுமென்றும் கூறுகின்றனர். இந்த ஆண்டு என்பது கரும்பு பிழியப்படும் காலத்தையொட்டி செப்டம்பர்/2014—அக்டோபர் /2015 காலத்தை குறிக்கும். உற்பத்தி தேவையை விட கூடுதலாக உள்ளதால் விலை ரூ.34 லிருந்து ரூ22 க்கு வீழ்ந்து விட்டதாக மூக்கைச் சிந்துகின்றன ஆலைகள் .(உண்மைதானா?)

சர்க்கரை ஆலைகளின் உற்பத்தியில் சர்க்கரையயை விட கொள்ளை லாபம் தருவது கரும்புச் சாற்றின் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் ‘’எரிசாராயம்’’ .இந்தகழிவை மொலாசஸ் என்கின்றனர். எரி சாராயம் வேதியியல்,மருந்தியல் துறை களில்மிக,மிக அதிகமாக பயன் படும் மூலப்பொருளாகும்.. பூசிக் கொள்ளும் ‘செண்ட்’’ லிருந்து நோய் தீர்க்கும் மருந்து வரை எரி சாராயத்தை சார்ந்துள்ளன..150 பொருள்களுக்கு மேற்பட்ட உற்பத்தி பொருள்கள் எரிசாரயத்தை நம்பியுள்ளன. சர்க்கரையை வைத்துக்கொண்டு எரிசாராயத்தை மட்டும் விவசாயிகளுக்கு கொடுத்து விட்டலே விவசாயிகள் பெரும் பணக்காரர் களகிவிடுவார்கள் என்றும் சொல்கின்றனர்.

இதைத் தவிர கரும்புச் சக்கையிலிருந்தும் மின்சாரம் தயாரிப்பதும் ஆலைகளின் அடுத்த வருமானம். இணை மின் உற்பத்தி (co-generation) என்ற இந்தமின்சாரம் மரபு சாரா மின்சாரம் என சலுகை களும் உண்டு.

இதுவரை யில் உற்பத்தியில் விற்பனையே இல்லையா என்ன? இனிப்புக் கடைகள் மூடப் பட்டுவிட்டனவா? அல்லது நாட்டில் அனைவருக்கும் சர்க்கரை வியாதி வந்துவிட்டதா முழு உற்பத்தியும் விற்பனையாக வில்லை என்று வைத்துக் கொண்டால் கூட,. உற்பத்தியின் மூலப் பொருளுக்கனா விலையை நிறுத்தி வைக்க சந்தை பொருளதாரக் கொள்கை வ்ழி செய்கிறதா? இது போன்ற வழி முறை வேறு வணிகத்தில் உண்டா? விவசாயிகள் ஏழைகள் , வலுவான குரலற்ற வர்கள் என்பதைத் தவிர வேறு காரணங்கள் இருக்கின்றனவா?

’’விவசாயிகளின் ஆதரவு அரசு’’ என்று சொல்லும் நடுவன அரசு அலகபாத் தீர்ப்பு வரும் வரை விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைக்காக எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை

ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் பொருளதாரத்திற்கான அமைச்சரவைக் குழு (CCEA—cabinet committee on economic affairs) அவசரமகாக் கூடியது. உயர்நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக் கப்பட்ட ஆலைகளின் துயர் துடைக்க உடனடியாக 6000 கோடியை வட்டியில்லா கடனகா தர தீர்மானித்தது. இதன் மூலம் ஆண்டுக்கு 600கோடியை நாட்டு மக்களின் பணம் ஆலைகளின்’’ துயர்’’துடைக்க செலவிடப்படும்

விற்ற கரும்புக்கான பணம் வராமல் விவசாயிகள் தவித்தபொழுது மனமிரங்த வில்லை அரசு .ஆனால் ஏற்கனவே விவசாயிகளின் பணத்தை கையிறுப்பக கொண்டஆலைகளுக்கு உதவ முன் வந்திருக்கிறது.

ஒருவேளை உயர் நீதி மன்றத்தீர்பு வழங்காதிருந்தலோ, அல்லது காலம் தாழ்த்தி வந்திருந்தாலோ அரசு விவசாயிகளுக்குச் சேரவேண்டிய பணத்திற்காக எந்த அக்கறையும் எடுத்திருக்காது. மவுனமே சாதித்திருக்கும். ஆலைகள் சர்க்கரை முழுவதுமாக விற்று தீர்ந்த வுடன் அடுத்த ஆண்டு கரும்புக்காக விவசாயிகளை தேடும் பொழுது பணம் தரும்,; அதுவும் விவசாயிகள் “தற்கொலை’’ எதும் செய்துகொள்ளதிருந்தால்..

எரிசாராயம், மின்சாரம், சர்க்கரை இத்தனை விற்றுமுதல், கரும்புக்கான பணம், கூடுதலாக வட்டில்லா கடன் இருந்தாலும், ஆலைகளின் வருத்தம் மட்டும் குறைய வில்லை. அரசு நேரிடை யகா விவசாயி களிடம் பட்டுவாடா செய்யும் என்பதும், எப்படியனாலும் கடன் தானே என்கின்றனர். எப்படி கதை. அரசு விவசாயிகளிடம் தராமல் இவர்கள் மூலமாகத் தந்திருதால் அதனையும் வேறு முதலீடு செய்திருக்கலாம்.; மீண்டும் விவசாயிகளை இழுத்தடித்திருக்கலாம் என்ற வருத்தமாக இருக்கலாம். .ஆலைகளின் கோரிக்கை என்ன தெரியுமா? அரசே கையில் உள்ள சர்க்கரையை கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான். தமிழக அரசு தண்ணீர் விற்பதுபோல நடுவன அரசு சர்க்கரையை விற்கலாம் ஒருவேளை சர்க்கரை அதிக விலை விற்றால் இந்த குரல்எப்படி ஒலிக்கும் என்பது நமக்கு தெரிந்தது தானே

இதில் கவனிக்கதக்க செய்திஎன்னவெனில் அமைச்சரவை முடிவை வெளியிட்டவர். நடுவன தரை வழிபோக்கு துறை அமைச்சர் ‘நித்தின் கட்கரி’’விவசாயாமைச்சரோ, உணவுத்துறை அமைச்சரோ அல்ல.நித்தின் கட்கரி மராட்டியத்தில் ’’புரிட் குருப்’’ என்ற சர்க்கரை ஆலைகளின் தலைவராக இருந்தவர்.

நிறுவனங்கள் வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில்லை,இதனாலேயே வங்கி களின் வாராக் கடன்4.4 விழுக்காடுக்கு மேலாக உயார்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி சொல்லிவருகிறது. ஒரு நிறுவனத்திற்கு கடனை வாங்கிவிட்டு அதற்கு செலவிடாமல் வேறு முதலீடுகளைச் செய்யப் படுகிறது என குற்றமும் சாட்டி வருகிறது வங்கிகள், வாராக் கடனுக்காக மீண்டும் கடன் புனரமைப்பு செய்ய வேண்டிய இக்கட்டுக்கு உள்ளகின்றன. கடன் புனரமைப்பு என்றால். கடனுக்கான .காலத்தை மேலும் பத்தண்டு களுக்கு நீடிப்பதாகும் .இந்த பத்தண்டு காலம் உயர் கால வரம்பாக வங்கிகள் நிர்ணயிக் கின்றன. சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பே வங்கிகளின் பெரிய மூலதனம்.இது தோரயமாக 32 லட்சம் கோடி என்கின்றனர். ஆக முதலீட்டாளர் கள் மக்கள் தாம்.

ஒரு திகைப்பூட்டும் செய்தியும் உண்டு ’’ரிலையன்ஸ்’’ நிறுவனத்தின் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமானஎரிக்காற்று குழாய் தொடர் நிறுவனம் நட்டமடைந்துள்ளதால், இதன் கடனும் புனரமைக்கப்பட்டுள்ளது. இது பத்தண்டுகளுக்கு மேலாக பதினைந்தண்டு காலமாகும். இந் நிறுவனத்தின் நட்டம் 436கோடியாகும்..முகேஷ் அம்பானிக்கு நடப்பண்டில் கிடைத்திருக்கும் டிவிடண்டு மட்டும் 1464கோடியாகும். எங்கே போய் முட்டிக் கொள்ள ?

சா.காந்தி

 

Author

pesot

Related Posts

Comments

  1. K.GURUSWAMY    

    கோட்டும் சூட்டும் போட்ட ஏழைகள்.

Leave a Reply to K.GURUSWAMY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>