shadow

நிதியமைச்சர் உரையின் துவக்கத்திலேயே குறிப்பிடும் முதல் சவாலே, விவசாய உற்பத்தி பொருள்களுக்கு விலை இல்லாமையும், கிராமப்புற வருவாய் குற்து போவதையும் தான். நாட்டில் 70 சத மக்கள் விவசாயத்தை நம்பி வாழும் கிராமப்புற மக்கள் என்றும் குறிப்பிடுகிறார். இவருக்கு முன்பு இருந்த நிதியமைச்சர்களைப் போலவே இந்த அரசு விவசாயத்திற்கானது தான் என்று சொல்லிக் கொள்கிறார். அதுவும் விவசாய நிலஙக்ளைக் கூட தொழிலதிபர்கள, அவர்க்ளது சம்மதமில்லாமலேயே கையகப்படுத்திக் கொள்ளலாம் என்ற சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வரவிருக்கும் நிலையிலேயே இதனைச் சொல்கிறார்.

ஆனால் விவசாயத்திற்கான எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இருக்கும் திட்டங்களின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டிருக்கின்றன. 70 சத மக்கள் நம்பி வாழும், விவசாயம் 14 சத மொத்த பொருளுறப்த்தியைத் தருகிறது. இந்த பொருளுறப்த்திக்கு சரியான விலை கிடைக்கவில்லையென்பது விவசாயகிளனின் நீண்ட நாள் கண்ணீர். எல்லா மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யும் இவர்கள் கண்ணீருடனே இருக்கிறார்கள்.

இந்த குறைபற்றி பேசும் நிதியமைச்சர், தேசிய அளவிலான சந்தை, பாசன வசதி பெருக்கம், தேசிய அளவிலான பால் உற்பத்தி, நீர் மேலாண்மை என்பதனை பெயரிட்டுள்ளார். இந்தாண்டு விவசாயத்திற்கான கடன் வசதி இலக்க 8.5 லட்சம் இது அதிகம் எனவும் குறிப்பிடுகிறார். விவசாயிகளுக்கான உயர்வருவாய் என்பது, மண் போன்றவற்றால் ஏற்படும் என்று நம்புகிறார். எனவே “சின்சாய போஜனா” “கிரிஷ் சின்சாய் யோஜனா” என்ற பெயருடனான பாசன திட்டம் பற்றி அறிவித்துள்ளார். இதன் மூலம் நீர் மேலாண்மை வருமென எதிர்பார்க்கின்றார் போலும்.

விளையின்றி கண்ணீர் விட்டு விவசாயிகளைப் பார்த்து, சோகக் கண்ணீரை வடிப்பதுடன், அரசுகள் நினறு கொண்டுவிட்டன. ஆனால் பாரம்பரியமாக அவர்கள் உருவாக்கிய நிலத்தை முதலாளிகள் கையகப்படுத்திக் கொள்ளுவதை நாட்டின் வளர்ச்சி என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.

எத்துணை பெரிய வெற்றியானாலும், நாட்டின் அனைத்துக் கட்சிகளும், ஆளும் கட்சியில் இணைந்தவர்களும், எதிர்கட்சிகளும் இத்திட்டத்தை எதிர்த்ததாலும், இதே நிதியமைசச்ர், இந்த மசோதாவுக்காக, மேலவையில் வாதாடுகிறார். வளர்சகிகு கடைக்கும பொழுது இந்தச் சட்டம் சில மாற்றங்களுடன் நிறைவேறியிருக்கலாம். அல்லது அதிர்ஷ்டவசமாக தோல்வியுற்றிருக்கலாம். நமது மாநில ஆளும் கட்சி இதனை பற்றி வாயைத் திறக்கவில்லை என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 70 சதமக்களின் வாழ்வாகிய விவசாயத்திற்கு 1,05,300 கோடியை ஒதுக்கியுள்ளர். இது GDயில் 0.7 இதற்கு மேல் என்ன சொல்ல?

 

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 10 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>