shadow

கடந்த மாதம் பிரான்ஸ், கனடா,ஜெர்மனி சுற்றுப் பயணத்தின்போது பல ஒப்பந்தங்களை பிரதமர் மோடி இந்தியா சார்பாக தீர்மானித்துள்ளார். அதில் பிரான்ஸ் உடனான ராபேல் போர்விமானக் கொள்முதலும், கனடாவுடனான அணுஉலைக்கான எரிபொருள் ஒப்பந்தமும் முக்கியமானது. இரண்டு ஒப்பந்தங்களும் நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்தவை என்பது இதன் முக்கியத்துவமாகும்.1974 பொக்காரன் அணுகுண்டு வெடிப்புக்கு பின், கனடா, தாரப்பூரி நிலையத்திற்கு அளித்து வந்த யுரேனியம் எரி பொருளை நிறுத்தியது. இந்த ஒப்பந்தம், ஏதோ கனடாவுடன் ஏற்பட்ட உறவு நிலைக்காக வரவில்லை. ஜனவரியில் ஒபாமாவுடனான அணு உலை ஒப்பந்தத்தை யொட்டி வந்திருக்கும் ஒட்டுஒப்பந்தம் தான் இது பற்றி வேறுதனத்தில் விவரிக்கலாம். ஆனால் 36 போல் விமானங்களுக்கான ஒப்பந்தமென்பது, பிரான்ஸையே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய வியப்புக்குறியதாகும்.

2007லிருந்து தீர்மானிக்கப்படாமல் பேசு வார்த்தையிலேயே இருந்த இந்த கொள்முதலைத் தான் மோடி முடிவுக்குக் கொண்டு வந்தது புதிய சர்சையை கிளப்பியுள்ளது. 126 நடுத்தர பலதர வேவுவிமானங்களுக்கான ஒப்பந்தம் 2007-ல் கோரப்பட்டது. ஒப்பந்தத்தில், விமானங்கள் தயாரிப்புக்கான தொழில் நுட்பமும் மாற்றப்பட வேண்டுமன்பதாகும். இந்த பிரச்சனையில் தான், இது நீண்டு கொண்டே வந்தது. ராபேல் விமானத்துடன், ஐரோப்பாவின், டைபோன் விமானமும் பேச்சுவார்த்தையில் இருந்தது. இதில் தான் மோடி (G 2G Government to Government) என்ற முறையில் 36 ராபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை யேற்றுக் கொண்டார். இது ஏறத்தாழ 4.5 பில்லியின் டாலர்க்கான ஒப்பந்தமாகலாம். 36 விமானங்களுடன், மேலும் 18 விமானங்கள் வாங்குவதும் எதிர்காலத்தில் முடிவெடுக்க படுமெனப்தும் ஒப்பந்த வடிவமாகும். 1980 களில் தேஜ் விமானங்களை இந்திய அரசு கொள்முதல் செய்தது. 1996-ல் ரஷ்யாவிடமிருந்தும் (SukoiMki) வாங்கியிருந்தது. பிரான்ஸுடனான ராபேல் விமானக் கொள்முதல், இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. ஆக “மேக் இன் பிரான்ஸ்”ஆகும். ராபேல் விமானத்தை விட ஐரோப்பாவின் “டைபோன்” விமானங்குறித்து விலைபேரம் பேசியிருக்க முடியும். எல்லாவகையிலும் டைபோன் ராபேலைவிட ஏற்றுக்கொள்ளப்பட்ட விமானமே. ஒப்பந்த புள்ளிக்காக நிறுவனங்கள் 50 மில்லியன் டாலர் வரை செலவழித்து இருக்கும் நிலையில், இது மற்ற ஒப்பந்த புள்ளிதாரர்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும்.

ராபேல் விமானம் தயாரிக்கும் டஸ்ஸால்ட (Dassault) நிறுவனம், கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து முடிவெடுக்கும் கூட்டத்தில் அனில் அம்பானியும் உடனிருந்தார் என்பது கூடுதல் தகவலாகும். ஒரு தலைப்பட்சமான இந்த ஒப்பந்தத்திற்கு, இந்தியாவின் நெருக்கடி தேவையிருப்பதாலேயே இந்தக் கொள்முதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்தியஎல்லை சீனாவின் கண்காணிப்பிலிருக்க காக்கப்பட வேண்டிய அவசரநிலை இருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. ஆனால் 36 விமானங்களை தருவதற்கு பிரான்ஸ் நிறுவனத்திற்கு எவ்வளவு காலமாகும் என்பதனை பார்த்தால் இந்த வாதம் ஏற்க முடிந்ததாக இல்லை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அன்றை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜெட்லி ராபேல் விமானம் வழங்க 3 லிருந்து 4 ஆண்டுகள் ஆகுமென பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மூன்று நான்கு ஆண்டுகாளும், விமானம் உடனடியாக நெருக்கடிக்கு எப்படி பயன்பட முடியும். டஸ் ஸால்ட் நிறுவனம், மாதத்திற்கு ஒரு விமானத்தையே தயாரிக்க முடியும். இதனையும், பிரான்ஸ் அரசுக்கு அது தயாரிக்கிறது. இதன் தயாரிப்புத் திறனைக் கூட்டுவதானாலும், அது 500க்கும் மேற்பட் பலதொழிற் சாலைகளின் திறனையும் உடன் அதிகரிக்க வேண்டியிருக்கும். இது உடனடி சாத்தியமல்ல. 36 விமானங்கள் என்பது இரண்டு விமான “ஸ்குவாட்ரன்” ஆகும்.

இதே இனத்தைச் சேர்ந்த ரஷ்யாவின் Sukoi விமானங்கள் ராபேலின் விலையில் பாதிதான் ஆகும். அத்துடன் அதன் பராமரிப்புச் செலவும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. மிரேஜ் விமானப்பராமரிப்பு 486. கோடியாக இருக்கும் பொழுது Sukoi க்கு 170 கோடியே ஆகிறது மிரேஜ்க்கு 9.5 கோடியென்றால் Sukoi 5.2 கோடியே செலவாகிறது என்பது GAG யின் அறிக்கை ஆக ராபேல் விமானக் கொள்முதல் இந்தியாவின் தேவைக்கானதல்ல 31,000 கோடிக்கான கொள் முதல், பாதுகாப்புத்துறை மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 94000யில் மூன்றில் ஒரு பகுதி, ராணுவ கொள்முதல் என்பது எப்பொழுதுமே பிரச்சனைகளைத்தான் கொண்டு வந்திருக்கிறது. வெளிப்படைத்தன்மை, மேக் இன் இந்தியா என்ற முழக்கங்களையெல்லாம் முடக்கி வைத்து விட்டு, இந்த கொள்முதல் கையெழுத்தாயிருக்கிறது.

ஜப்பானுடனான ஒப்பந்தத்தில், இந்திய “பர்மா” நிறுவனங்கள் பற்றிய பிரச்சனையில் முடிவு எட்டப்படாமலேயே இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.

ஆஸ்திலேலியாவுடனான அணுஉலை எரி பொருள் ஒப்பந்தம் உப்புசப்பற்றதாக இருந்தது. என்றாலும் அதானி ஒரு பில்லியனுக்கு மூலதனமிட ஏற்கப்பட்டது.

அமெரிக்காவுடன், அணுஉலை இழப்பீட்டு ஒப்பந்தத்தை நீர்த்து போக செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரான்ஸுடன், ராபேல் ஒப்பந்தம் பிரான்ஸை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கனடாவின் அணுஉலைக்கான எரிபொருள் ஒப்பந்தம், இந்திய அணு உலைகளின் கனடாவைச் சார்ந்திருக்க செய்கிறது.

இந்திய மக்களுக்கு மேக் இன் இந்தியா, “அச்சாபின்”, ஸ்வாத்பாரத், எனபல முழக்கங்களுடன் நிலகையகப்படுத்துதல், தொழிலாளர் நலச் சட்டங்கள் நிர்வாக ஆதரவாக திருத்தம், மின்சார வினியோகம் தனியார் மயப்படுத்துதல் என பல கார்பரேட் திட்டங்களுக்கு சட்டதிருத்தம் இன்னமும் நான்காண்டுகள் உள்ளன.

 

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 14 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>