shadow

எளியமக்களுக்கும், நடுத்தர வர்க்கத்திற்குமான இந்த மானியத்தை வெட்டித்தான், கடன் சுமையை அரசு குறைத்திருக்கிறது என்பதனை முனன்தாகவே தெரிவித்துள்ளோம்.

இதுவரையில் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு மானியத்திற்கான செலவினத்தை 8.5 சதம் குறைத்திருக்கிறது அரசு. நடப்பாண்டில் (14-15) 2,66,691 கோடியாக இருக்கும் இந்த மாணியம், வருமாண்டில் 2,43,810 கோடியாக மட்டுமே இருக்கும்.14-15-ல் GDPயில் 2.1 சதம் என்பது 15-16ல் 1.7% ஆகிவிட்டது. 13-14-ம் ஆண்டில் குறைவின் காரணமாக,30,000 கோடி செலவு குறைந்திருக்கிறது. நடப்பாண்டின் இறுதியில் ஒதுக்கீட்டில் மேலும், 8,400 கோடி மிச்சமாகக் கூடும். என்றாலும், பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு 4 ரூபாய் சர்சார்ஜ் விதிக்கப்பட்டு உலகளவிலான விலையின் பயனை மறைத்து, ஆண்டில் 37,000 கோடி சுங்கம் மறறும எக்ஸைஸ் வரி மூலம் கிடைத்தது. வருமாண்டில் இது 1.41 லட்சம் கோடியாக உயர்ந்து போகும். விவசாயத்திறகு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1.05 லட்சம் கோடியைவிட அதிகம் தான். GDP-யில் இது 0.8 சதமாகும். ஆனாலும் வணிக ஆய்வாளர்கள். இந்த மானியத்தால் பெட்ரோலிய நிறுவனங்கள் தள்ளாடுவதாகத் தான் காட்சி வர்ணனை செய்யும்.

உணவுக்கான மானியம் 1,24,419 கோடியாக நடப்பாண்டை விட 1,744 கோடி மட்டுமே உயர்ந்துள்ளது. இதில் 64,919 கோடி தேசிய உணவு பாதுகாப்புக்கானது. இச்சட்டம் பாதியில் தொங்கிக் கொண்டுளள்து. வட மாநிலங்களில் செயல்படுத்தபட்டாலும், தென் மாநிலங்கள் இதனைச் செயல்படுத்தவில்லை. எனவே இந்த மானியம் முழுமையாக செலவழிக்கப்படப் போவதில்லை.

அதுபோன்றே உர மானியம், நடப்பாண்டில் உள்ள 70,967 கோடியிலிருந்து 72,968 கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது.

நடுவன அரசு, வரி வருவாயில் நடப்பாண்டில் உள்ள 32 சதத்திலிருந்து 42 சதத்திற்கு உயர்ந்துள்ளதால், சமூக நலத்திட்டங்களை மாநிலங்கள் தலையில் சுமத்துகிறது. வரி வருவாய பங்குடன், பல திட்டங்களை நிதி ஒதுக்கீடுகளையும், 14வது நிதிக் கமிஷன் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளையும், மானியங்கள் நடைமுறைப்படுத்துவதில் மாநிலங்களுக்கிடையே நிலவும் வேறுபாட்டையும் நன்கு அலசினால், இந்த 42 ஒதுக்கீட்டை நடுவன அரசு உனே ஏற்றுக கொண்டதன் பின்னணி தெரியும். இந்த ஒதுக்கீட்டால் பாதிப்படையப் போகின்ற மாநிலங்கள் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, மேற்கு வங்கம். இது சாதகமாகப் போவது, மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் போன்றவை. இதனை மற்றொரு சந்தர்ப்பத்தில் விவரிப்போம். இந்தாண்டு GST வரி விதிப்பை அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கிறது மத்திய அரசு. 42 ஒதுக்கீட்டைச் சொல்லி, அடுத்த ஆண்டில் GST யை நடைமுறைப்படுத்தி விடும்.42 பங்கால் பிளவுபட்டும் மாநிலங்கள் இதனைச் சாதிக்கலாம். அப்பொழுதும் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்.

 

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 20 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>