shadow

நமது எல்லா ஊடகங்களும், -பாப்புலிசம்- என்ற சொல்லை வெகுவாக பயன் படுத்தி வருகின்றன. சமூக நலத்திட்டங்களையும், அரசியலார்கள் மக்களின் ஆசைக்கு விதைக்கும் இலவசத்திட்டங்ளையும்– அனைத்தையுமே பாப்புலிசம் என்றே சொல்லி வருகின்றன.. இதில் பெரிய ஊழல் நடப்பதாகவும் அந்த மக்களைச செனறடைவதில்லை யென்றும் தொடர்ந்து சொல்லுகின்றன. நடுவன அரசோ, ஆதார் அட்டை இருந்தால்தான் பள்ளிகளில் தரும் மதிய உணவிலிருந்து எந்த நலதிட்ட உதவியும் பெறமுடியும் என்றும் சொல்லியுள்ளது.. இதன் மூலம், நலத்திட்டங்களில் உள்ள ஓட்டைகளையெல்லாம் அடைத்து விடப்போவதாவும் சொல்லி வருகிறது. பாப்புலிசம் என்றழைக்கப் படும் திட்டங்களில் ஏழைகளுக்கு வழங்கப்படும் மானிய அல்லது இலவச உணவுப்பொருடகள் பற்றித்தான் பெரிதும் கவலையுடன் விமர்சிக்கிறார்கள். இலவச மின்விசிறி, மிக்ஸி போன்றவற்றை நாம் இந்த உணவு வழங்களுடன் ஒப்பிடத்தயாரில்லை.. ஆனால் உணவு, குடிநீர், என்பதைக்கூட அரசுக்கு நிதிச்சுமை, இது முறையாக பயன்தரவில்லை யென்ற சித்திரத்தை, எல்லா ஊடகங்களும் ஒருதலையாக வரைந்து வருவதைத்தான் நாம் ஏற்க வில்லை..எந்த சமூக அக்கறையுள்ள அரசும், பசியடன் படிக்கவரும் மாணவனுக்கு, ஆதார் இல்லையென்பதற்காக மதிய உணவை மறுக்காது. இது இரக்கமற்ற செயல். இதுநாள் வரை மதிய உணவு வழங்கப்பட்ட பசியுடன் இருக்கும் மாணவனுக்கு, உணவை, திடீரென மறுப்பது அரசு செயல் அல்ல. நடுவன அரசு இதைத்தான் செய்திருக்கிறது.எல்லையில் இரவு, பகலாய் காவல் காக்கும் நமது வீர்ர்களுக்கே சரியாக உணவளிக்காத அரசிடம் இது எதிர்பார்க்க முடியாததல்ல. ஆனால் மேடைதோறும் போர் வீர்ர்களின் சேவைபோல், பொது மக்கள் 50 நாட்கள் நடுத்தெருவில் காத்திருந்தால் அது வீர்ர்களின் சேவை போன்ற தேசபக்தி என அரசு முழங்குகிறது.ஆதார் நலத்திட்டங்களுக்கு கட்டயமல்ல என்று உச்சநீதிமன்றம் சொல்லுகிறது. இதுவும் காவேரி வழக்கு தீர்ப்பு போலத்தான். கண்ணீர் மட்டும்தான் மிச்சம்.இந்த நாட்டின் மறு பக்கத்தில் என்ன நடக்கிறது.வங்கிகளில் மக்களின் சேமிப்பு பணத்தில், 11.88 லட்சம் கோடியை, கடனாக பெற்ற கார்பரேட் நிறுவனங்கள் அதனை திருப்பிச் செலுத்தவில்லை. இந்த பெரும் பகுதி கடன் அரசு முதலீட்டை வரவேற்கும் கட்டமைப்புத் துறையாகும். அதாவது மின்சாரம், சாலைகள், கட்டுமானத்துறை போன்றவைகள். 2014ல், 2.14 லட்சம் கோடியாகயிருந்த கடன், அரசின் பெரு முயற்சியால், 11.88 லடசம் கோடிக்கு வளர்ந்துள்ளது. டெவலப்மெண்ட் வரப் போகிறது என்ற அரசு– கடனில்தான் டெவலப்மெண்ட்டை கொண்டு வந்திருக்கிறது. உலகளவில் பெரிய பொருளாதார வீழ்ச்சி– சந்தையில் தேவையில்லை– ஆகவே கடன் கட்டமுடியவில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது. உற்பத்தி தேக்கம் கடனைக் கட்டமுடியவில்லை என்றால், வளர்ச்சி, தொடர்ந்து அதே அளவில் இருப்பதாக சொல்லப்படுவது உண்மையாக இருக்க முடியாதல்லவா. வளர்ச்சி வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு,என்பதெல்லாம் தோற்றுப்போய்விட்டது என்பது தானே பொருளாக யிருக்கமுடியு.ம். பொருளாதாரத் தேக்கம் கொள்கையின் தவறைத்தானே சுட்டிக்காட்டும். எட்டப்பட்டதாக சொல்லப்படும் வளர்ச்சி விகிதமும் தவறனாது தானே. நிறுவனங்கள், அரசு இரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும்..பிரதமர் மோடி யைவிட வேறு யாரும், தனியாருக்கு இத்தனை பெரிய ஆதரவை தரவில்லை. நாட்டின் 75 கோடி ஏழைமக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியம் வெறும் 1.4 லட்சம் கோடிதான். ஆனால் 100க்கும் குறைவான நிறுவனங்கள்சுருட்டிக்கொண்டது 11.88 லட்சம் கோடி இதனை– செயல் படாத சொத்து– என்கின்றனர். பெயர் என்ன வாக யிருந்தாலும் அது மக்களின் பணம் என்பதுதான் கவலைக்குறியது.பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களை மாநில அரசுகளே ஏற்க வேண்டும், இந்த சுமைகளை சமூக நலத்திட்டங்களை வெட்டுவதன் மூலம் சரிகட்டச்சொல்லுகிறது நடுவன அரசு. இந்த வாதத்தை தனியாருக்கு ஏன் அமுல் படுத்த வில்லை.இதனைவிட சகித்துகொள்ள முடியாத யோசனைகளை யெல்லாம், நம் பொருளாதர ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள். வணிக செய்தித்தாளில் வந்திருக்கும் ஒரு கட்டுறையின் சாரமிது.செயல் படாத சொத்து வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடைக்கல். நிறுவனங்கள் செயல் பட்டால்தான் கடனைத்தருப்பி செலுத்த முடியும்.அதனை செயல் பட வைக்க , கடனில் ஒரு பகுதியைவெட்டிவிட்டு, வேறு முதலீடுகளுக்கு அவர்களுக்கே கடன் வழங்க வேண்டும். புதிய துறையின் செயல் பாட்டின் மூலம்பகுதிக்கடனை வசூலிக்கலாம்.எல்லாவஎற்றையும் விட இந்த வாராக்கடனை தள்ளுபடி செய்வது துணிச்சல் மிகுந்த செயல்.அப்படி செய்தால் வங்கிகள் தங்கள் கணக்குகளை சரி செய்து கொண்டு மீண்டும் கடன் வழங்கும் நிலைக்கு வந்துவிட முடியும்.அரசின் உத்திரவின் படி கடன் வழங்கிய -திறமையற்ற- வங்கிகளை ஒன்றாக இணைத்துவிடவோ, மூடிவிடமோ செய்யலாம். ஆனால் மூன்று பெரிய வங்கிகள், வங்கத்தில் இருப்பதால் மாநில ஆளும் கட்சி வேலை இழப்பைக் காட்டி நடுவன ஆளும் கட்சிக்கு சவாலை விடலாம். இது நடுவன ஆளும் கட்சியின் வாய்ப்பை குறைக்ககூடும்– – என முடிகிறது .இந்த ஒரு கட்டுரை மட்டுமல்ல, கிட்டதட்ட எல்ல கட்டுரைகளின் சாரமே இதுவாகத்தானிருக்கிறது. ஆனால் இதே ஆய்வாளர்கள் விவசயா கடன் தள்ளுபடி என்றால், நாட்டின்பொ ருளாதாரமே அதளபாதளத்திற்கு போய்விடும் என்கின்றனர். அதனை –பாப்புலிசம்- என்று பெயரும் சூட்டிவிடுகின்றனர். தங்களுக்கு விளம்பரம் தரும் துறைக்கு ஏற்றாற் போலவே ஊடகங்களும் செய்திகளை வடிவமைக்கின்றன.தனியார் வந்தால் தான் வளர்ச்சி, வேலைவாய்பு, வறுமை ஒழிப்பு, என்றெல்லாம் பேசிய இதே ஆய்வார்களும்,ஊடகங்களும் தான் இன்று தனியார் மயத்தின் தோல்வியையும், கொள்ளையடிக்கப்பட்ட பொதுச்சொத்து பற்றியும் பேசக்கூட தயங்குகின்றன. அதனை மூடி மறைக்கப் பார்க்கின்றன.அரசோ இதற்கு எல்லாவற்றிற்கு மேலாக மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களால் தான் எல்லாஊழல்களும் நடப்பது போலவும், எளிய மக்களிடம்தான் கறுப்பு பணமே முடங்கிகிடப்பது போலவும், உரக்க பேசி வருகிறது.மக்கள் அட்டை பணத்திற்கு மாறிவிட்டால் உலகசரியாகிவிடும் என உரக்கபேசிவருகிறது.மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு உணவிற்காக ரூ.400 மானியத்திற்கு அடையாளம் கேட்கும் நடுவன அரசு 11.88 லட்சம் கோடி யார் யாரிடமிருந்து வர வேண்டும் என்பதைக்கூட ஏன் சொல்ல மாட்டேன் என்கிறது.-அதுவும் உச்சநீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும். ஏழை மாணவனுக்கு அளிக்கப்படும் மதிய உணவில் கூட ஊழலைத்தேடும் நடுவனஅரசு கார்பரேட் அடித்த கொள்ளையை ஏன் மறைக்கிறது. வாயைக்கூட திறக்க மறுக்கிறது.இதுதான் காரணமா?

1. பிரதமர் வேட்பளர் என மோடி அறிவிக்கப்பட்ட 11 மாதத்தில் அவரின் ஊடக விளம்பரத்திற்கான செலவு மட்டும் 5,000 கோடி என 24/05/2014 தேதியிட்ட எகனாமிக் பொலிட்டிகல் வீக்கிலி யில் வெளியாகியிருக்கிறது. ஆனால் பா.ஜ.கா வின் மொத்த வரவு செலவு கணக்கே 3000 கோடியளவிற்குத்தான். யார் தந்தார்கள் இந்த 5,000 கோடியை-

2. அஸோஸியேஷன் பார் டெமாக்கரட்டிக ரைட்டஸ் என்ற அமைப்பு டெல்லி உயர் நீதி மன்றத்தில் பா.ஜ.க வெளி நாட்டு நிறுவனத்திடமிருந்து பெற்ற நன்கொடையைப்பற்றி வழக்கு தொடுத்திருந்தது. அந்த நிதி– – சட்டத்திற்கு புறம்பானது– என டெல்லி உயர் நீதி மன்றம் 2014 ல் தீர்ப்பும் வழங்கியது. ஆனால் 2016 நிதி நிலையறிக்கை பற்றிய –நிதிசட்டத்துடன்- அன்னிய நிறுவனம் என்பதற்கு புதிய சட்டத்திருத்ததை செய்துள்ளது. நிதிச்சட்டம் நாடளுமன்ற மேலவை ஒப்புதல் பெற வேண்டியதில்லை. அத்துடன் உச்ச நீதி மன்றத்தில் தொடுத்திருந்த தனது மேல் முறையீட்டு மனுவையும் பா.ஜ.க வாபஸ்வா ங்கிகொண்டுவிட்டது.கொடுத்தது யார்- எவ்வெளவு- அந்த நிறுவனம் இந்தியாவில் பெற்ற வங்கி கடன் எவ்வளவு.

3. உ.பி தேர்தலுக்கு முன்பு 2,000 த்திற்கு மேலான நன்கொடை யாரிடமிருந்து பெறப்பட்டது என்பதை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் எனதிருத்தம் கொண்டு வந்த்து. ஆனால் நிதி மசோதா நிறைவேற்றப்படும் பொழுது நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு இருந்த 7.5 சதம் வரம்பை நீக்கி விட்டது. நிறுவனங்கள் யாருக்கு நன்கொடை அளித்தார்கள் என்பதும் சொல்லத் தேவையும் இல்லை. உ.பி பா.ஜ.க வுக்களித்த இரண்டாவது பெரிய நன்கொடை.

4. அட்டை பணத்திற்கு மாறவேண்டும் சொன்ன பிறகு செல் போன் நிறுவனங்களின் ஒரு மாத வணிகம் 1.2 கோடி. இன்று எஸ்.பி.ஐ வங்கி அட்டை பணத்தை பயன் படுத்த விதித்திருக்கும் கட்டணம் ஆண்டுக்கு 26,000 கோடி. ஒரு வங்கியில் கிடைக்கும் பணம் இது. 26 வங்கிகளுக்கு எவ்வளவு. கார்பாரேட்கள் கொள்ளையடித்த பணத்தை மக்கள் தலையில் கட்டப்பட்டு விட்டது. இதற்காகத்தான் — கறுப்பு பணம் -பண மதிப்பு நீக்கம்- என்ற காட்சிகள் எல்லாம்.பணம் சட்டத்தையே ஆளுகிறது,, சட்டம் ஏழைகளை ஆளுகிறது.

இதுதான் கார்புரலிஸம்– சா.காந்தி.

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>