shadow

மின்சாரம் குறித்து 13/2/15 அன்ரு தினமனியும், 15/2/15 அன்று இந்தியன் எக்செ பிரசும் முறையே தலையங்கமும் கட்டுரையும் வெளியிட்டுள்ளன. இரண்டும் ஒரே கருத்தாக பணம் படைத்தவர்கள் தடையில்ல மின்சாரம் பெற தனி மின்பதை அமைப்பதும் மற்றவர்கள் மின் வெட்டுடன் தான் வாழ தகுதி யனாவர்கள் என்பது போல தர்ம நியாயங்களை சொல்லியுள்ளனர். மின் இழப்பும் மின் திருட்டும் மின் வாரியங் களின் நட்ட்த்திற்கு காரணம் என்று கூறும் express ன் சங்கர் அய்யர் தேசிய மின்சார பகிர்மான நிறுவனம் வேண்டும் என்று முடிக்கிறர், தினமனியோ யூனிட் ஒன்று ரூ.12.50 க்கு வாங்குவது இல்லாவிட்டல் மின்வெட்டு தடுக்க முடியதது போலவும், விவசாயத்துக்கு மீட்ட்ர் பொறுத்தமல் இருப்பதையும் காரண்ம் காட்டி மின்வெட்டை அரசியல் கட்சிகள் விமர்சிப்பதையும் குறை சொல்லியுள்ளது. மாநில அரசு, மற்றும் நடுவன அரசு மின்சாரம் யூனிட் ரூ2.15 ஆக இருக்கும் பொழுது தனியார் மின்சாரம் ஏன் 12.50 ஆயிற்று என்றோ, குறைந்த நிலையாக அதனை வாங்க வேண்டாம் என்றோ சொல்ல தினமனி க்கு தைரியம் இல்லை. தலையங்கம் 13ந் தேதி திருவரங்கம் தேர்தலை ஒட்டி வந்திருக்கும் பொழுது அதன் காரணம் வேறாகத் தனிறுக்க முடியும். எங்களது மறுப்பு கடித்தையும் அது வெளியிட வில்லை.”ஒரு கருத்தை மிக வலுவக இஙுகு பதிவுசெய்திட வேண்டும். மனிதகுலத்துக்கு மட்டும் தான் வெளி ஆற்றல் தேவை படுகிறது. மற்ற உயிரின்ங்கள் உடல் ஆற்றாலை மட்டுமே நம்பி வாழ்பவை. வெளி ஆற்றலின் வடிவம் தான் மின்சாரம். ஒரு நாட்டின் ஒட்டு மொத்த வளதின் மூல வளம் வெளிஆற்றல் சக்தி வ்டிவங்கள் தாம்.முதல் வளம் உணவு. ஆக ஒவ்வொறு மனிதனுக்கும் நாட்டின் வெளி ஆற்றல் வளத்தில் முழு உரிமையும் உண்டு. அது பணத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப் படக்கூடாது கடவுள் மீது நம்பிக்கை கொண்ட வர்கள் இருக்கலாம். ஆனால் , பணம் ஒன்றும் கடவுளால் படைக்கப் பட்ட்தல்ல.” பணம் படைத்தவன் கொள்ளை லாபம் ச்ம்பதிப்பதற்கன துறையல்ல மின்சாரம். 1991 ஆம் ஆண்டிலிருந்து கையாளப்பட்ட மிகத்தவறான கொள்கையால் தான் மின்சாரம் இந்த நிலைக்கு வந்தது. புதிய உற்பத்திக்கு மூலதனம் இல்லை என்று சொன்ன நடுவன அரசு, ஒவ்வெறு ஆண்டும், 24% மூல தனக் கட்டண்மும் அதனுடன் மின்சாரக் கட்டணத்தையும் கொடுத்து மின்வாரியங்களை தனியார் மின்சாரதை வாங்க வைத்தது. தனியரோ வெறும் 30% மூலதனத்தை மட்டுமே நான்கு ஆண்டுகளில் செலவழித் திருந்தனர். இது தான் மின்வாரியங்களை மீளமுடியாத கடனில் முழ்கடித்து. 1957 ஆம் ஆண்டு தொடங்கி 2001 ம் ஆண்டு வரையனா 44ஆண்டுகளில் அனைத்து மின்வாரியங்களும் சம்பதித்த மொத்த கடன் 33,000கோடி தான். அதுவும் இருண்டு கிடந்த நாட்டில் மின்சாரத்தை அனைத்து மூலைக்கும் எடுத்துசென்றதால் வந்தது. இதனைச் சமுதய மூலதனமாகக் கொள்ள வேண்டும்.ஆனால் தனியார் மின்சாரத்தால் 2001 ம் ஆண்டிலிருந்து 2011 ஆண்டுக்குள்ள்ன 10 ஆண்டு காலதில் 1.1 லட்சம் கோடி நட்ட்த்தை அடைந்தன வாரியங்கள்.முழுக்க முழுக்க தனியார் மின்சாரதினால் வந்த கடன் ஆகும் .இது சமுதய மூலதன மல்ல; தனியாரின் கொள்ளை லாப வேட்டை. 2001 ம் ஆண்டில் நாட்டின் மொத்த நிறுவுத் திறன் 1,16,000மெகாவாட்டாக இருந்த பொழுது வெறும் 2241 மெகாவாட் ஆக இருந்த தனியார் மின்னுற்பத்தி இன்று 93,000 மெகாவாட் உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த நிறுவுதிறனோ 2,58,701 மெகாவாட் தான். 1.93சதத்திலிருந்து 36 சதத்துக்கு உயர்ந்து போயிருக்கிறது. மின்வாரியங்கள் ம்க்களுக்கு எட்டும் விலையில் மின்சாரத்தை வைக்க மீண்டும், மீண்டும் நட்ட்த்தையே சம்பாதித்தன. மாநில அரசுகளோ தனியார் மின்சார விலையை ஈடு கட்ட மானியத்தை மட்டும் தரமுடிந்த்தே தவிர புதிய நிலையங்களுக்கு முதலீடு செய்யமுடியவிலை. உதாரணத்துக்கு 2008 ல் தமிழக அரசின் மின் மானியம் 1987 கோடி.கடந்த ஆண்டு 4900கோடி. உடன்குடி மின் திட்ட்த் துக்கு மூலதனமில்லை. அது மட்டுமல்ல;தனியர் கொள்முதல் மிகப்பெரிய ஊழலுக்கு வழியை ஏற்படுத்தியது.ஆண்டுக்கு 2400 கோடி யூனிட் கொள்முதல் மிகப்பெரிய ஊழல் பணத்தை தரு வல்லது..வாரியங்கள் நட்ட்த்திலிருந்து மீள வேண்டு மெனில் தனியார் மின்சாரத்தை தவிர்பதே ஒரே வழி என்ற நிலை தெளிவடைந்த பொழுது தான் தினமணி தனியருக்க வாதடவும் விவசாயிகளை சாடவும் ஆரம்பித் திருக்கிறது.கடந்த 31/3/2014 ல் காற்றாலை தனியார் மின்சாரத்தை சரியக கணக்கிடாத தால் 13000கோடி நட்டம் என்பதை செய்தியளார் கூட்டத்தில் தெரிவித்தோம். அன்று ஊடகங்கள், தினமணி உட்பட ஏனோ கண்டு கொள்ள வில்லை. நட்ட்த்திலிருந்து வாரியங்கள் மீளாது என்றால் தனியார் மின்சாரத்தை விற்க சந்தை வேண்டுமே. அதற்கன கண்டு பிடிப்பு தான் பணம் உள்ளவனுக்கு தடை யில்ல மின்சாரம்;மற்றவர் களுக்கு மின்வெட்டு கலந்த மின்சாரம் என்கின்றனர் திரு.சங்கர் அய்யரும் தினமணியும்.ச்ச் இவர்கள் மட்டுமல்ல, நடுவன அரசும் இதற்கன சட்டத் திருத்ததை கொண்டுவரப்போகிறது. அதனை தனியாக விவரிப்போம். – சா.காந்தி.

Author

pesot

Related Posts

Comments

  1. K.GURUSWAMY    

    வர்த்தகர்களின் நோக்கம் இலாபம் தான். ஒரு வர்த்தகர் இன்னொரு வர்த்தகரின் இலாபம் குறைவதை வெளிப்படுத்த தயங்குகிறார்.மின்சாரம் என்பது பொதுத்துறையின் வசம் இருந்தால்தான் மின்வாரியங்களின் நட்டம் குறையும்.வியாபாரம் என்றாலே இலாபம்,தரகு,அதிகார ஆதிக்கம்
    எல்லாமே இடம் பெறும்.

Leave a Reply to K.GURUSWAMY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 7 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>