shadow

தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைக்குள் அமையவிருக்கிற “நியூட்ரினோ” என்பது பற்றிய ஆய்வகம், தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 2008ல் மின்சார வெட்டு,தொழில் வாய்ப்பு இழப்பில் தொடங்கிய தமிழகம், அணு உமலை, மீத்தேன் திட்டம் என தொழில் நுட்பம் சார்ந்த போராட்டங்களையும் சந்தித்து வருகிறது. இடையில் காவேரி, முல்லை பெரியாறு சார்ந்த போராட்டங்களையும், கவலையையும் சந்தித்து வருகிறது. இடையில் காவேரி, முல்லை பெரியாறு சார்ந்த நீரியல் பிரச்சனைகளும் சேர்ந்து கொண்டன. இவை பற்றிய தீர்வுகள் எட்டுமுன்பாகவே “நியூட்ரினோ” அறிவியல் சார்ந்த பிரச்சனை மீண்டும் தமிழகத்தை உலுக்க ஆரம்பித்திருக்கிறது.

முதலில் மேற்குத் தொடர்ச்சி மலை பற்றியது. ஐக்கிய நாடுகள் சபையின் “யுனெஸ்கோ”, அறிவித்திருக்கும் பண்பாட்டு அரிய உயிரியல், இயற்கை வளம் கொண்ட இடமாகும்.

இரண்டாவதாக “நியூட்ரினோ” பற்றிய அறிமுகமோ, அறிவோ, செய்தியோ பரந்துபடாத பெருமளவிற்கு மறைக்கப்பட்ட இயற்பியல் பொருளாகவே இருக்கிறது. அறியப்பட்டிருக்கும் இதன் இயற்பியல் குணங்களும், இதன் தோற்றுவாய் எனக் கருதப்படும் வான் வெளி கோளங்களும், நியூட்ரினோகுறித்து பெரிய ஆர்வத்தைத் கிளறுகின்றன.

மிகவும் சிறிய துகளான இந்த இயற்பியல் பொருள் சூரியனிலிருந்து வினாடிக்கு லட்ச, லட்ச, லட்ச கோடி வெளிவருகிறது என்கின்றனர். இது தவிர வான் வெளியிலும், விணமீன்களிலிருந்தும், இதுவரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. நம் உடலி ஒவ்வொரு சதுர செ.மீ. பத்து லட்சம் துகள்கள் தினம் ஊடுருவிச் செல்கின்றன என்கின்றனர்.

ஆனால், இத்துகள்களை எநத் பொருளும் தடுத்து நிறுத்த முடியாது. ஒளியின் வேகத்திற்கு அளவில் இது பயனிககும், ஒரே நேர் கோட்டில் செல்லும் என்றும் சொல்லப்படுகிறது. இதன் சக்தி பல தரப்பாக மாறுகின்றன. இதன் சக்தி எலக்ட்ரான் வோல்ட் என்று சொல்லப்படுகிறது.

இதன் தனிச் சிறப்பு அம்சம், உலக உருண்டையை உள்ளாக துளைத்துக் கொண்டு அடுத்த பகுதி கோளத்தின் வழியே வெளியே செல்லும். இந்த இயற்பியல், குணமே இது பற்றிய ஆய்வுக்கும். அச்சத்திற்கும் காரணமாகிறது. ஒளியின் வேகத்தில் – உலகத்தின், நிலப்பகுதியின் உள்ளே ஒரு பொருள் ஊடுருவ முடியுமானால், இதனை கட்டுபப்டுத்த நினைக்கும், மனித அதிகார பேராசை எதிர்கால ஆயுதமாக பார்க்க கூடும். வேதியல் பொருள்களும், சுற்று சூழல் பொருள்களும், அணுவும், ஆயுதமாகியிருக்கும் போது, இதனையும் ஆயுதமாக மாற்றும் முயற்சிதான் முதலாக நிற்கும். அந்த கோணத்தைஇதன் சிறப்பான இஇயற்பியல் குணத்தின், மகத்துவம், பயனளிக்கும், பெரும், அதிகார சக்தியை நாம் ஒதுக்கிவிட முடியாது. இதை மனதில் நிறுத்தியே நாம் நியூட்ரினோ பற்றிய முடிவகளை அணுக வேண்டியிருக்கிறது.

அத்துடன் உலகில் உள்ள பொருள்களின் அடிப்படை பொருள்கள 12 என்றும், இதில் 6 lapton என்றும், 6 Guarks என்று வகைப்படுத்துகின்றனர். இதில் “நியூட்ரினோ” lapton வகையைச் சேர்ந்ததாம்.

இந்த துகளை 1956லேயே ரேய்ஸ்னா என்ற அறிஞர் கண்டறிந்தார். அன்று தொடங்கிய ஆய்வு,1995 இவருக்கு, இந்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசையும் பெற்றுத்தந்தது. எனவே இன்று போசுவது போல், நியூட்ரினோ அறிவியல் உலகிற்கு புதியது அல்ல; மக்களுக்குத்தான் இது புதியது. இதில் பல்வேறு ஆய்வுகளும், பயன்பாடுகள் பற்றி ஆய்வு வெற்றிகளும் முன்னதாகவே கண்டறியப்பட்டுள்ளன. 90களின் இறுதியில்தாம் உலகம் இணையதளம் (Internet) பற்றி அறிந்தது. பயன்பாட்டுக்கும் வந்தது. ஆனால் இரண்டாவது உலகப் போரின் இறுதியில் இது பயன்பாட்டில் இருந்தது என்பது நாம் அறிந்திருப்போமா? 30 ஆண்டுகளுக்கு முன்னதாக கடிகாரத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்த “டிஜிட்டல்” வான்வெளி விணக்லங்களில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுடப்மே. சந்திரன் மனிதன் இறங்கிய 1969ம் ஆண்டிற்கு பின்பே சமூக பயன்பாட்டிற்கு, வணிக பொருளானது. எனவே “நியூட்ரினோ” இதுவரையில் கடந்துள்ள பாதை என்ன என்பது தெரியாது. இதற்கு முன்பாக ஜப்பான், இத்தாலி, அமெரிக்க போன்ற இடங்களில் இதற்கான ஆய்வகங்கள் இருந்தன என்கிறது பாபா அணு ஆராய்ச்சி நிலையம். இந்தியாவில் கோலார் தங்கவயலின் ஆழ்துளையிலும் இயங்கயிது. பின்னர், தங்கவயலுடன் இது கைவிடப்பட்டது. என்றும் சொல்கிறது இந்நிலையம், இங்குதான் அணுஉலைக்கழிவுகளை கொட்டப்போகிறோம் என்று அணு சக்தித்துறை கூடங்குளம் வழக்கில் சொல்லியதை நாம் நினைவுக்கு கொண்டு வர வேண்டும். ஜப்பானில், அணுகுண்டு வீசப்பட்டதும் நமக்கு நினைவிருக்க கூடும். அணு குண்டினை கண்டறிந்த விஞ்ஞானிதான் “என்ரிகோபெர்மி.” இவர் பெயரால் இயங்கும் “பெர்மிலாப்”அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருக்கிறது. இதுதான தலைமையிடமும் கூட ஜப்பானில் துவங்கிய ஆய்வகம் மூடப்பட்டுவிட்டது. நியூட்ரினோவைப்பயன்படுத்தி அணு ஆயுதம் தரித்த நீர்மூழ்கிகப்பலுக்கு செய்திகள் அனுப்பவும், பெறவும் செய்யமுடிந்திருக்கிறது.நீரியலும் உலகின் பொருண்மையும், இதனை தடுக்க முடியவில்லை என்பதுதான். என்றாலும் நியூட்ரினோ பற்றிய செய்திகள் வெளியுலகுக்கு மிகக் குறைவாகவே தெரிந்துள்ளன.

தேனி மாவட்ட்ம, பொட்டி புரத்திற்கு திரும்புவோம், இங்குதான், மலைக்கு கீழே இந்த ஆய்வகம் அமைய உள்ளதாம். இதன் மேல்மலையென்பது 1000 மீட்டர்க்கு மேலாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, இந்த மலையில் சிறி கீறல்கள் கூட விழக் கூடாது என்பதும் தொழில்நுட்ப தேவை. மலைக்குள்ளே 2491 மீட்டர்க்கு,7.5 மீட்டர் குதிரை லாடம் போன்ற குகைப்பாதை அமையப்போகிறதாம், இதனுள்ளே 68.640 சதுர மீட்டர் அளவுக்கு இந்த ஆய்வகம் அமையப்போகிறதாம். இது தவிர உள்ளே வேறு பாதைகளும, பல்வேறு அளவிலான ஆய்வகங்களும் வர இருக்கின்றன. மொத்தமாக 2,36,000 கனமீட்டர் பாறைகள் வெட்டியெடுக்கப் போகின்றனர். கிட்டத்தட்ட 8,00,000 டன் எடையுள்ளதாகும். இங்கு 5-10 லட்சம் கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்துவார்கள்.

இந்த ஆய்வகத்தில் Bron (Alorimeter, ICAC) என்ற 50,000 டன் எடை கொண்ட காந்த மூட்டப்பட்ட இரும்புத்தகடுகள் அடுக்க போகின்றனர். இதனிடையே (Ressistive Plate Chamber-RPC) என்ற இடைவெளியுமிருக்கும். ICAC தான் நியூட்ரினோவை கண்டறியப்போகின்ற எந்திரமென்றும் தெரிவிக்கின்றனர்.

பாபா நிலையத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஆய்வகத்திலிருந்து எந்த அணுக்கதிர் வீச்சும் இருக்காது என அடியோடு மறுக்கின்றனர். 2010-ல் இந்த நிலையத்திற்கு நடுவன அரசு அனுமதி வழங்கியது. 22-04-2010-ல் அணுசக்தி துறையைச் சார்ந்த இந்திய கணித அறிவியல் மையம், சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றிருக்கிறது. அந்த அனுமதியின் வகை இப்படியிருக்கிறது அணுமின் நிலையம், அணுசக்தி மறு சுழற்சி (Enrichment) அணுக்கழிவு மேலாண்மை என்பதாகும். அணுக்கதிர் வீச்சே இருக்காது என்றால், எப்படி இப்படியொரு அனுமதிபெறப்பட்டிருக்கும்? அணுக்கதிர் வீச்சு இருக்கும் இடத்தில் “இல்லை இல்லவே இல்லை” என்றுதான் இதுவரை அணுசக்தி துறை சத்தியம் செய்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில். கதிர்வீச்சு இல்லாத இடத்தில் இருப்பதாகச் சொல்லி ஏன் அனுமதி பெறவேண்டுமென்ற கேள்வி வலுவானதாகவும், விடையில்லாததாகவும் இருக்கிறது. எனவே அணுக்கதிர் வீச்சு இருக்கப்போகிறது. அரசும், ஆய்வ நிலையங்களும் மறைக்கின்றனர் எனப்துன் நறுவப்பட்டுவரும் உண்மையாகிறது. அப்படியானால் நியூட்ரினோ ஆய்வகம் என்று சொல்லப்படுவது உண்மையில் என்ன?

இந்த ஆய்வகம் தான் உலகிலேயே மிகப்பெரிய ஆய்வகமாகும்.நியூட்ரினோ பற்றி கடந் 60 ஆணடுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்துவரும் அமெரிக்கா, ஆயுதமாக ஈடு இணையற்ற பெரிய வல்லமைத்தர தக்க ஒருபொருள் பற்றிய ஆய்வை வேறு நாட்டில் அமைக்கும் என்பதனை யாரும் ஏற்கமாட்டார்கள். அப்படியானால் இந்த ஆய்வகத்தின் நோக்கமும் செயல்பாடும் என்ன? 1995 லிருந்து, அமெரிக்கா கோரி வந்த இந்த நிலையத்தை பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா ஏற்றது தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளித்திருப்பதாக அமெரிக்காவின் முன்ன்ள் உள்துறைச் செயலாளர் ஹிலாரிகிளின்டன் தெரிவித்ததாகவும் செய்திகள் சொல்கின்றன.

இவையெல்லாம், பெரியதொரு சந்தேகத்தை முன்வைக்கின்றன, அப்படியானால்……….

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>