shadow

நடுவன அரசின் பட்ஜெட்டில், 8.5 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்கப்போவதாகவும், இது கடந்த ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 8.1 லட்சம் கோடியை விட அதிகம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். ஆனால் 4 சதமும் -7 சதமும் இருந்த விவசாயக் கடன் வட்டி விகிதம், இப்பொழுது 11 சதத்திற்கு உயர்த்தப்பட்டுவிட்டது.

ஏற்கனவே நிலம் கையகப்படுத்தல் சட்டத்தினால், அச்சமுற்றிருக்கும் விவசாயிகள், கடன் பற்றிய அறிவிப்பினால் அதிர்ந்து போயிருக்கிறார்கள். விவசாயம் என்ற தொழில் ஒரு தொல்லை மிகுந்தது: தொழில் வளர்ச்சிக்கு குநத்கமானது என்று அரசு எண்ணுகிறது போலும். உணவுத் தேவையானால் உலகச் சந்தையில் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்று அரசு சொல்லக்கூடும். 2008-ம் ஆண்டுகளில், உணவுப் பொருட்கள் விலை உலகசந்தையில் கடுமையாக உயர்ந்துபோனது. இந்த விலையேற்றம் மட்டும், 5 கோடி மக்களை கடுமையான வறுமையில் தள்ளியதாக ஐ.நா. மன்றம் தெரிவித்தது. நம் நாட்டில் பணவீக்கமும் 12 சதத்திற்கு மேலே உயர்ந்துபோனது. 60களில் நாட்டின் உணவு உற்பத்தியில் பற்றாக்குறை இருந்தபோது இறக்குமதியையே சார்ந்திருக்க வேண்டி வந்தது. 65-ல் பாகிஸ்த்னுடனான போரில் இந்தியா பெறும் பகுதியைக்கையகப்படுத்திருந்தது. போரில் பெற்ற வெற்றியை, விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாய சூழல் இந்தியாவுக்கு வரக்காரணமே. உணவு இறக்குமதிதான். இந்த ஒப்பந்தம் சாத்தியமில்லையென்றால், உணவு இறக்குமதி நின்று போய் இந்தியா தவித்தும் போயிருக்கும்.

இன்று மட்டுமல்ல, கடந்த காலங்களிலும், அரசர்கள் உணவுக் களங்சியத்தை காத்து வந்திருக்கின்றனர். நாட்டின் பாதுகாப்பு, படை பலத்தில் மட்டுமல்ல உணவு பாதுகாப்பிலும் இருக்கிறது. இந்த அடிப்படையை அரசு எப்படி தகர்க்க முடியுமென்று தெரியவில்லை. ஆனால் செய்கிறது.

இன்று விவசாயத்திற்கான கடன் என்பது வங்கிகளுக்கு நிர்ணயிக்கப்படும் குறியீடு வங்கிகள், இந்தக்கடனை வழங்குவதில் தயக்கம் காட்டவே செய்கின்றன. ஏனெனில் திரும்ப பெறப்படாமல் ரத்து செய்யப்படுவது அரசியல் முடிவாகும்பொழுது, வங்கிகளின் வாராக் கடனும் கூடிப்போகிறது. அரசியல் முடிவுகளின் இழப்புகளை, வங்கிகளுக்கு அரசு ஈடு செய்வதில்லை.

விவசாயத்திற்கான கடன் என்பது, கூட்டுறவு வங்கிகள் மூலம் தான் செம்மையாக வழங்க முடியும். அதுபோல், எல்லாக்கடன்களையும், குறுகிய காலக்கடனாக (ஓராண்டு) இருக்க முடியாது. விவாசய உபகரணங்களான டிராக்டர், போன்றவைகள் நடுத்தர மற்றும் நீண்டகால கடனாக கணக்கிட வேண்டும். கூட்டுறவுச் சங்கங்கள் பெருமளவுக்கு விவசாயிகளின் கட்டுப்பாட்டில் இயங்கவும். அரசியலாரை ஒதுக்கிடவும் வேண்டும். கீழ்மட்ட ஜனநாயகமின்றி தன்னை ஜனநாயக நாடாக மார்தட்டிக் கொள்ளமுடியாது. வங்கிகளுக்கும், விவசாயத்தினருக்கும் இருக்கும் தொடர்புகள் மிகக் குறைவுதான். ஆனால் வங்கிக் கிளைகளே பரவலாக இருக்கின்றன. இதற்கான மாற்று அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

2013-ம் ஆண்டில் டாடா இன்ஸ்டியூட் ஆப்சோசியல் சயின்ஸ் வங்கிக் கடன் வழங்கப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்து ரிசர்வ் வங்கிக்கு அளித்துள்ளது. இதன்படி 30 சத விவசாயக் கடன் மட்டுமே கிராமப்புறங்களில் வழங்கப்பட்டிருக்கிறது. 70 சத கடன் நகர்புறங்களிலும், பெரு நகரங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் பல கடன்கள் ஒரு கோடிக்கு மேலானவை என்கிறது. இதில் தெரிவதெல்லாம் தொழில் நிறுவனங்கள், பெரிய அளவுக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி விவசாயம் செய்வதாக காட்டுகின்றன. இந்த நிலப்பகுதி விவசாயத்திற்கான கடன்களை இவர்க்ள குறைந்த வட்டியில் பெற்று தங்கள் தொழில்களுக்கு பயன்படுத்துகின்றனர். இவர்களால் வாங்கும் கடனுக்கு பெருமளவுக்கு அடமானம் தரமுடியும். வங்கிகளைப் பொருத்தமட்டில், தாங்கள் வழங்கும் கடனுக்கு, உத்திரவாத சொத்து கிடைப்பதால், இதனை வழங்கியும்விடும். அத்துடன் அரசு நிர்ணயித்த குறியீட்டையும் எளிதில் எட்டிவிட முடியும். இது நிர்வாக சிக்கலாகும். அரசின் கொள்கை முடிவு நடைமுறைச்சிக்கலினால், நேர் எதிர்முனைக்குச் சென்றுவிடுகிறது.

அரசு விவசாய மறைமுகக் கடன் என்பதனை ஒவ்வொரு வங்கிக்கும் 4.5 சதமெனவும் நிர்ணயித்துள்ளது. மறைமுகக்கடன் (Indirect Lending)என்பது விவசாய பொருட்கள் சார்ந்த தொழில்களாகும். உதாரணமாக, உணவு பதப்படுத்துதல் போன்றவை.

அதுமட்டுமல்ல, நேனல் சாம்பிள் சர்வே, கடன் மற்றும், வட்டி பற்றிய ஆய்வை நடத்தியுள்ளது. இந்த அறிக்கை 2014 டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதன்படி 44 சத கிராமப்புற வாராக்கடன் என்பது விவசாயம் சாராத நிறுவனங்களிடமிருந்து தான் என்று சொல்லுகிறது. இதில் அதிர்சியூட்டும் செய்தி என்னவெனில் 33 சதத்திற்கு மேலான மொத்தக் கடனும், கந்து வட்டிக்காரர்களால் (Money lenders) பெறப்பட்டிருக்கிறது என்பது தான். தொழில் நிறுவனங்கள் தவிர, விவசாயக் கடனே பெரிய சட்ப்புறம்பான தொழிலுக்கு பெரிய உதவியையும், விவசாயிகளை கொடுமைபடுத்தவும் செய்கிறது. இத்தனையும், அரசுக்குத் தெரியாமல் இல்லை. தெரிந்ததுதான், என்றாலும், மௌனமாக இதனை அனுமதிக்கிறது. நாட்டைப்பற்றியோ, அதன் எதிர் கால இலக்கு பற்றியோ எந்தபார்வையும் அற்ற அரசியல்வாதிகள் தாம், இன்று பரவிக் கிடக்கின்றனர். இவர்களுக்கு உலக வங்கியும், வல்லரசுகளும் சொல்லித்தரும், கொள்கைகளையே நிறைவேற்றுகின்றனர்.

அன்னியக் கடன், அன்னிய முதலீடு என்பதெல்லாம், வளர்ந்த நாடுகளின் சந்தைக்கானவை. ஆனால் உள்நாட்டில் “வளர்ச்சி தான் வறுமை ஒழிக்கும்” என்ற முழக்கத்தோடு செயல்படுத்துகின்றனர். இதில் ஊழலுக்கு பெரிய வசதியைம, வல்லரசுகள் செய்கின்றன. இதன் பின்விளைவுகள் அரசியலார்க்கு தெரிந்தாலும், அந்த விளைவுகள் வரவேண்டிய காலம் பின்னாலிருப்பதால், அதனைப் பற்றி கவலை கொள்வதில்லை. விளைவுகள் நெருங்கும் பொழுது, நாட்டின் நிர்வாகம் மொத்தமாக ஊழலில் சிக்கி சீரழிந்து போயிருக்கும்.

மக்கள் பொருமை எல்லைகடக்கும் பொழுது, அரசுகளை பொறுப்பாக்கிவிட்டு, அடுத்த பொம்மைகளை இந்த வல்லரசுகள் நிலைப்படுத்தும். இதுதான் எகிப்து, தொடங்கி லிபியா, இத்தோனேசிய, இலங்கை வரை நடந்துள்ளது. வல்லரசுகளின் நெருக்குதலுக்கு பலியாகாமல், ரஷ்யாவும், மலேசியாவும், 97-98ல் சமாளித்தன. வெனின் சுலாவும், இன்றைய பொலிவியாவும், நல்ல உதாரணங்களே, கியூபா நீண்டகால உதாரணம். இதன் விரிவாக்கம், தனியாக அறிய வேண்டிய தொகுதி.

விவசாயம், சிறிது சிறிதாக நசிக்கப்படுவதுதான் வல்லரசுகளின் திட்டம். இதன் மூலம், நாட்டின் நீர்வளம், நிலம் அனைத்தையும் பெரிய அளவில் வணிகப்படுத்த முடியும். எஞ்சும் விவசாயத்திற்கு, மரபுசாரா விவசாயமென மீண்டுமொரு வல்லரசுகளின் வணிகத்தை கடை விரிக்கும்.

அனைத்திற்கும் உதவுவது, விவசாயிகளின் அறியாமையும், செய்திப்பற்றாக்குறையும் தான். இதனை வழி நடத்தும் பொறுப்பும், கடமையும், நம்போன்ற அமைப்புகளுக்கு உண்டு. வருங்கால சந்ததிக்கு, நாம் எதனை விட்டுச் செல்லப்போகிறோம்.

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 3 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>