shadow

மின்சாரச்சட்டம் 2003-ன் பிரிவு 3, நடுவன அரசு மின்சாரக் கொள்கை, மின்சாரக் கட்டணக் கொள்கைகளை வகுக்க அதிகாரமளிக்கிறது. பிரிவு 61, (கட்டண விகிதம்) ஆணையங்கள் இந்த கொள்கைகளை வழிகாட்டும் நெறியாகக் (Guide Lines) கொள்ளச்சொல்கிறது. அதேபோல், மின்சாரச்சட்டம் 2003-ன் காரணத்தையும், நோக்கத்தையும் (Reasons and Objective) சொல்லும்பொழுது, மின்சாரக்கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் பெற்ற மின் வாரியங்களின் அதிகாரத்தை அரசுகளேயெடுத்து கொண்டுவிட்டதால், மின்கட்டண நிர்ணயிக்கும் அதிகாரம் பெற்ற மின்வாரியங்களின் அதிகாரத்தை அரசுகளேயெடுத்து கொண்டுவிட்டதால், மின்கட்டண நிர்ணயத்திலிருந்து இந்த அதிகாரத்தினை தள்ளி வைக்க (Distancing) ஒழுங்குமுறை ஆணையங்கள் கொண்டுவரப்பட்டதாகச் சொல்கிறது. ஆக மின்சாரக் கட்டணம் அரசு சார்பில்லாத, நாட்டின் மின்கட்டணக் கொள்கையினை வழிகாட்டியாகக் கொண்டு ஆணையங்கள் தனித்து கட்டண நிர்ணயம் செய்ய வேண்டுமென்றாகிறது.

ஆனால் நடுவன அரசு நாட்டின் மின்சாரக் கட்டணக் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்ய திருத்தங்களை வெளியிட்டுள்ளது (இதில் நாம் தெரிவித்துள்ள கருத்துகளைத் தனியே வெளியிட்டுள்ளோம்) .

மின்சாரம் நாட்டின் பாதி மக்கள் தொகைக்கு இன்னமும் எட்ட வேண்டியிருக்கிறது. இன்நிலையில் இந்த மின் கட்டணக் கொள்கைத் திருத்தம் மக்களை மின்சாரத்திலிருந்து, படுவேகமாக அன்னியப்படுத்துகிறது. மின்சாரம் எட்டாத மக்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு சேர்ப்பதற்கு பதிலாக, இன்று மின்சாரம் பெற்றுவரும் ஏழை மக்களிடமிருந்தும் மின்சாரத்தை பறிக்கப்போகிறது இந்த மின்சாரக் கட்டணக் கொள்கை.

முதலில் மின்சாரச் சட்டத்தின் காரணம், மற்றும் நோக்கத்திற்கு எதிராக, நடுவன அரசின் மின் கட்டணக் கொள்கையை ஆணைங்கள் தவறாது (necessarily) கடைபிடிக்கச் சொல்கிறது. கட்டாயமாக்குகிறது. இதன்மூலம் மாநில அரசுகளிடமிருந்து ஆணையங்களுக்கு மாற்றப்பட்ட இந்த அதிகாரத்தை இப்பொழுது நடுவன அரசு எடுத்துக்கொள்கிறது. அதாவது மாநில அரசுகள் மின்சாரச்சட்டத்திற்கு முன்பு செய்து வந்ததை தற்போது நடுவன அரசு எடுத்துக்கொள்கிறது. அதாவது மாநில அரசுகள் மின்சாரச்சட்டத்திற்கு முன்பு செய்து வந்ததை தற்போது நடுவன அரசு தன்கையில் எடுத்துக்கொள்கிறது. மக்கள் மாநில அரசை மின்சாரத்திற்காக பொறுப்பாக்கும்பொழுது, நடுவன அரசு மாநில அரசுகளை பலியிட்டுவிட்டு, மின்சாரக் கட்டணத்தை முதலீட்டாளர்களின் லாபத்திற்கு பலியிட்டிருக்கிறது இந்த திருத்தங்கள் மூலமாக இதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் திருத்தங்களில் மிகப்பெரிய “அபத்தமே” மின்சார மானியங்களை, சமையல் எரிக்காற்று போல் நேரடியாக வழங்கலாம் என்பதுதான், முன்னதாக மானியங்கள் உரியவருக்குப் போய்ச் சேருவதில்லை, அதனால்தான் “ஆதார்” அடையாளம், ஜன்தன் யோஜன என்றெல்லாம் மார்தட்டிய நடுவன அரசு இப்பொழுது எந்த தடையுமின்றி நேரிடையாக மக்களிடம் போய்ச்சேரும் இந்த மானியத்திற்கும், “மருந்து” கொடுக்கலாம் என்கிறது. இடைமானியம் போக, அரசு மானியமும் சேர்ந்ததால் தான் இன்று நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களால், மின்சாரத்தையெட்ட முடிகிறது. இதில் இடைமானியத்தை நீக்கிவிட்டதால்தான், சந்தைப்போட்டிக்கு பொருள் என்று சொல்கிறது. நடுவன அரசு, இடைமானியமும் இன்றி, சூரியஒளி மின்சாரத்தையும் எட்டு சதத்திற்கு மேல் உயர்த்தி, முழுக்க, முழுக்க மாநில அரசின் மானியத்தில் மட்டுமே மின்சாரத்தை மக்கள் எட்டிபார்க்க முடியுமென்றால், எதிர்காலத்தில் மின்சாரத்தின் விலை ஏறுமாறாகத்தானிருக்க முடியும். ஓரிடத்தில், பரந்த கட்டிடமே, குளிரூட்டப்பட்டு பட்டபகலில் மின்விளக்கில் மின்னும்பொழுது, வீட்டில் தொலைக்காட்சி பெட்டிக்கும், கணனிக்கும் கூட மின்சாரம் பயன்படத்த முடியாத நிலையை உருவாக்கும்.

இதனை நோக்கித்தான் இந்த கொள்கை திருத்தம் அடியெடுத்து வைக்கிறது. அன்னிய மூலதனத்திற்காக இத்தனையையும் செய்கிறது நடுவன அரசு.

ஏழைகள் வளர்ச்சிக்குத் தேவையில்லையென்கிறது. அப்படியானால் வளர்ச்சி யாருக்கு?

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 7 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>