shadow

தேன் ஓர் இனிய உணவுப் பொருள் ஆகும். இது மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான திரவத்தில் இருந்து தேனீக்கள் தேனை உறிஞ்சுகின்றன. தேன், கலோரி ஆற்றல் மிகுந்த ஓர் உணவாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் மூலம், அந்த ஈக்கள் ஒரு முறை உலகைச் சுற்றி வந்துவிடலாம்.

  • பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெறும்.

  • பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.

  • மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

  • எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

  • நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

  • ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

  • ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

  • தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

  • இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

  • கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.

  • தேனில் சுண்ணாம்பு கலந்து தடவினால், உடலில் உள்ள கட்டிகள் உடையும், அல்லது வீக்கம் குறையும்.

தேனில் உள்ள பொருட்கள்

பிரக்டோஸ் – 38.2%

குளுக்கோஸ் – 31.3%

மால்டோஸ் – 7.1%

சுக்ரோஸ் – 1.3%

நீர் – 17.2%

சர்க்கரை – 1.5%

சாம்பல் – 0.2%

மற்றவை – 3.2%

இயற்கையாகக் கிடைக்கும் தேனிற்கு மருத்துவ குணங்கள் அதிகம். அறுவை சிசிச்சை பெற்ற நோயாளிகளின் காயங்களை குணமாக்குவதற்குத் தேனைப் பயன்படுத்தலாம். ஆப்பிரிக்கா நாட்டில், அறுவை சிகிச்சை முடித்து தையல்கள் போட்டபின் காயம் ஆறுவதறக்க சுத்தமான தேனைத் தடவுகிறார்கள். காயங்களின் மீது தேனைத் தடவுவதால் காயம் விரைவில் குணமடையும்.

தேனில் எண்ணற்ற மருத்துவப் பொருட்களின் சேர்மங்கள் உள்ளன. தேனில் உள்ள அதிக சர்க்க்ரை, குளுகோனிக் அமிலம் ஆகியவை காயங்களில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கின்றன. மேலும், தீக்காயங்களைச் சுற்றிலும் தேன் அமிலச் சூழ்நிலையயை உருவாக்கி நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுப்பதால் அவை விரைவில் ஆறிவிடும். நீரிழிவு நோயாளிகள் தேனைப் பயன்படுத்தினால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். காயமடைந்த தசைகளை சரிசெய்யவும் தேன் உதவுகிறது.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு காயங்களின் மீது தேனைத் தடவ வேண்டும். மணிக்கு ஒரு முறை தேனைத் தடவினால் காயங்கள் சுத்தமாகிவிடும். 10 நாட்களில் காயங்களில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும்.

தேனைப் பயன்டுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

  1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.

  2. தேனை சூடாக்கி பயன்படுத்தக்கூடாது.

  3. வெப்பநிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள், தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.

தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே, அதில்

நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் அதிகமாகும். சீனா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் உலகளவில் தேன் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. தேன் உற்பத்தியில் அமெரிக்கா உலகளவில் நான்காவது இடம் வகிக்கிறது.

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>