shadow

பாரிசில் கூடிய சுற்றுசூழலுக்கான மாநாடு கடந்க 15/12/15 ல் ஒப்பந்தமாக உருப்பெற்றுள்ளது .இதில் வளர்ந்த நாடுகளின் திட்டமே பெரிதும் இடம் பெற்றுள்ளது .இதனைத்தனியே ஆய்ந்தறிய வேண்டும். இந்த ஒப்பந்தம் முடிந்த மூன்று வாரத்திற்குள்ளாக, உலக நடநடிக்கைகள் துரிதமாகி வருவதையும் ஒரு அவசரநிலையை நோக்கி நகருவதையும் பார்க்க முடிகிறது.இக்கட்டுரை எழுதும் போது வடகொரியா ஹைட்ரஜண் குண்டினை வெடித்துள்ள செய்தி வந்துள்ளது.இந்த நடவடிக்கைகளில் இந்தியா சிக்கிக்கொண்டுள்ளதா அல்லது தடுமாறுகிறதா என்ற பார்வையை முன் வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாரிஸ் ஒப்பந்தம் முடிந்த கையோடு நாடாளுமன்ற கூட்டத் தொடரும் முடிவுக்கு வந்தது. கடந்த கூட்டத்தொடர் போன்றே இந்த கூட்டத்தொடரும் GST. மசோதாவில் எந்த முன்னேற்றத்தையும் அடைய வில்லை. இது நரேந்திர மோடி அரசு எதனையும் செயல் படுத்த முடியாத, அரசியல் வல்லமையற்ற அரசாக உருவகப்படுத்தம் வழியாகவே அன்னியச்செய்தி நிறுவனங்கள் பார்கின்றன. முன்னதாக நிலம் கையகப்படுத்தும் மசோதா மூன்று முறை அவசர சட்டமாக நீடிக்கப்பட்டாலும், கடைசியில் அதனைக்கைவிட வேண்டி வந்தது. அதுமட்டுமல்லாது நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பையும் சந்திக்கவேன்டிவந்தது. இப்பொழுது GST. மசோதாவும், முடிவு தெரியாமல் நீடித்துகொண்டே போகிறது .ஊடகங்கள் காங்கிரஸை குறைசொன்னாலும், உண்மையில் இந்த தோல்விக்கு ஆளும் கட்சியே காரணமாகத் தெரிகிறது.முந்தையக்கூட்டத் தொடரின் போது, நடுவன அரசிலும்,அதன் கட்சியிலும் மிக முக்கியபங்கு வகிக்கும் சுஷ்மா சுவராஜ் மீது மறுத்து ஒதுக்க முடியாத அளவுக்கு குற்றச்சாட்டு விவாதத்திற்கு வந்தது. உண்மையில் …..மசோதாவைவிட இந்த பிரச்சனையே முதன்னையும் பெற்றது.எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பின்மை யென்ற கருத்தும் வலுவிழந்து போனது. சுஷ்மா சுவராஜ் மீதானா குற்றச்சாட்டு எங்கிருந்து கசிந்த தென்பதுதான் ஆச்சரியமானது. அது வெளியுறவுத்துறையிலிருந்தே வந்திருக்க வேண்டும் யென்றே யூகிக்கமுடிகிறது.அது சரியானால் ஆளும் கட்சிக்குள்ளே யிருந்துதான் வந்திருக்க வேண்டும். அப்படி அவர் குறிவைக்கப்பட காரணம் என்ன??.

இது ஒருபுறமிருக்க , குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன்பாகவே BJP .யின் முக்கிய அங்கம் வகிக்கும் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்புக்காக அனைத்து முயற்சியையும் மேற்கொணடார். இடையில் பீகார் சட்டமன்றதேர்தலில் கிடைத்த தோல்வியும் BJP யின் மாற்றத்திறகு காரணமாக பார்க்கலாம்.காங்கிரஸின் ஒத்துழைப்பு கிடைத்துவிடும் என்ற நிலை தொழில் அதிபர்கள் அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையும் அளித்தது. ஆனால் BJP யின் துயரமான சுப்பிரமணியசாமி, ராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமைப்பற்றி சர்சையை கிளப்பினார். இது காங்கிரஸை நிதானிக்க வைத்தது. உச்சநீதி மன்றத்தில் இப்பிரச்சனை அடிபட்டு போனவுடன், இந்துஸ்தான் ஹெரால்டு பத்திரிக்கை பற்றிய சர்ச்சை எழுந்தது நீதிமன்றம் சோனியா காந்திக்கும், ராகுல்காந்திக்கும் நோட்டிஸ் அனுப்பியது. இதுவும் சுப்பிரமணிசாமி தொடந்த வழக்குதான்.காங்கிரஸை பொறுத்தவரையில், BJP அரசு தன்கையைமுறுக்கி பணியவைக்க பார்க்கிறது எனற முடிவுக்கே தள்ளியது. முன்னாள்ஆளும் கட்சிக்கு எரிச்சல் ஊட்டும் நிலையில் இன்றய ஆளும் கட்சியுடன் அது ஒத்துழைக்க முடியாது என்பது வெளிப்படையானது. அப்படியொன்றும் மக்கள் நலன் தேடும் சட்டமும் அல்ல.நிறுவனங்களுக்கு சலுகைகாட்டும் திருத்தமும் மாநில அரசுகளின் உரிமைகளை மையப்படுத்தும் வடிவமுமேயாகும். இதனைத்தான் சுப்பிரமணியசாமி எதிர்பார்த்திருக்க கூடும் .ஏன்??

மீண்டும்ஒருபின்னடைவைச் சந்தித்தது நடுவன அரசு.

கூட்டத்தொடர் முடியும் தருவாயில் டில்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் பற்றி டில்லி அரசுக்கும் நடுவன அரசுக்குமிடையே பிரச்சனை வளர்ந்தது. நிதியமைச்சரை முன் நிறுத்தியப் பிரச்சனையில் ஆளும் கடசியின் உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீர்ருமான கீர்த்தி ஆசாத் எதிரணியிலிருந்து பந்து வீசினார் பி.ஜே.பி அரசு இவரை சஸ்பென்ட் செய்ய வேண்டிவந்தது ஆசாத் தனக்கு சுப்பிரமணியசாமி உதவுவார் என்று சொன்னதையும் கவனிக்க வேண்டும் ஒரு வழியில் இது நடுவன அரசின் GST BILL பின்னடைவை முதன்மைப்படுத்தாமல் காத்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆக நடுவனஅரசிலும், ஆளும் கட்சியிலும் மிக மிக முக்கிய பங்காற்றும் இரு அமைச்சர்களும், குறுகிய காலத்திற்குள் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதையும், நடுவன அரசு தனது ஆளுமையை நிலைநிறுத்த முடியாமல் போனாதையும் தான் நாம் ஆய்வுக்குட்படுத்த முயற்சிக்கிறோம். இருவர் மீதும் ஆளும் கட்சியிலிருந்தே பிரச்சனை கிளப்ப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் வலுவடைந்திருக்கும் போது இதன் திசைவழி ஆய்வுக்கு உரியதே.

சுப்பிரமணியசாமி, நிதியமைச்சர் பதவிக்குபோட்டியிடுபவர் எனவேதான் ஜெட்லியை குறிவைக்கிறார் என்று மேலெழுந்த வாரியாக முடிவு செய்யதிடமுடியாது. சாமியின் நடவடிக்கைகளை அவரது ஆசைக்கானது என்று கணக்கிடுவது, தவறனா முடிவுக்கே இட்டுச்செல்லும். ராஜிவ்காந்தி மரணத்திலிருந்து இவர் மீதானா சந்தேகம் வேறுதிசையைத்தான் காட்டுகிறது.இந்தியாவில் வலுவான அரசு வந்துவிடக்கூடாது யென்ற மேற்குலக நாடுகளின் ராஜதந்திரத்தை நாம் ஒதுக்கி விட முடியாது. இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி எனத் தனிப்பெருபான்மையை வெல்லக்கூடிய தலைவர்களின் மரணம் இதனைத்தான் உறுதிப்படுத்துகிறது. ராஜிவ்க்கு பிறகு வந்த கூட்டணி அரசுகள், பலமற்றவையாகவும், தனித்த முடிவெடுக்ககூடியதாகவும் இல்லை. நரேந்திர மோடி யின் வெற்றி இதற்கு முற்றுபுள்ளியைவைத்தது. ஆனால், இந்த வெற்றியைக்கொண்டு செலுத்தும் வல்லமையோ, முதிர்ச்சியோ காணப்படவேயில்லை.ஆளும் கட்சியில் மூத்த அனுபவம் பெற்றோரின் உதவியையும் இவர் பெறத்தவறிவிட்டார்.ஆட்சியைவிட மதக்கொளகைகளே முன்னிறுத்தப்பட்டதால் இ,வரது ஆதரவு, குறுகிய காலத்திற்குள் சரிய ஆரம்பித்துள்ளது BJP. யின் வெற்றியென்பது போய், RSS சங்பரிவார் அமைப்பகளின் வெற்றிபோன்று, அவதானிக்கப்பட்டதால் மக்களின் ஏமாற்றத்தை தவிர்க்க முடியாது போகிறது. எனவே ஆரமாபகால வெற்றி ஆறுமாத்திற்கே நிலைத்தது டெல்லி ,பீகார்.என்று தொடர்ந்த தோல்வியுடன் ராஜஸ்தானின் விஜயராஜே, மத்திய பிரதேசத்தின் சௌகான் அரசுகளும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டது. இந்த தொடர்ச்சியில் கடைசியில் நிதியமைச்சரும், மோடியின் நம்பிக்கைக்குறியவருமான ஜெட்லி குறிவைக்கப்படுகிறார். இந்த பின்னியிலேயே, சாமியின் நடவடிக்கைகளை கணிக்க வேண்டும். அவரது தனிப்பட்ட ஆசைக்கானதல்ல. வேறு திசையை நோக்கியே அவரது செயல்திட்டம் நகருகின்றது என்பதனை இதன்பின்னர் நடந்தேறியுள்ள நிகழ்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

மோடி அரசு பதவியேற்றவுடன் அமெரிக்காவுடனான உறவையே முதன்மைப்படுத்தினார் அதே நேரத்தில் பாகிஸ்தானுடனான உறவையும் மிக வேகமாக சரிக்கும் நடவடிக்கையிலேயே இறங்கினார். இந்தியாவின் நடவடிக்கை பாகிஸ்தானுடன் ஒரு போர் என்ற அளவுக்கு நகர்த்தப்பட்டும் வந்தது. இந்த அணுகுமுறைக்கு அமெரிக்காவின் தலையசைப்பது போன்றே இருந்தது. இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி பாகிஸ்தானுக்கும் பயணம் செய்வதுதான் நடைமுறைவழக்கம். ஆனால் இது மாற்றப்பட்டிருக்கிறது. 2005க்கு பிறகு கிடப்பில் போடப்பட்டஅணுஒப்பந்தங்கள் தூசி தட்டப்பட்டு உயிரூட்டப்பட்டன.

ஆனால் நாடளுமன்ற கூட்டத்தொடர முடிந்தவுடன் டிசம்பரில் பிரதமரின் ரஷ்ய ப.யணம் மிக முக்கியமானதாகும். இதற்கு முன்பாக ஈரானுடன் ஏற்பட்ட எரிக்காற்று ஒப்பந்தமும் இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளவேண்டும்.ஈரானுக்கும் மேறகுலக நாடுகளுக்கமான உறவுநிலை அறிந்ததுதான்.. கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தென் கோடி முனையில் இந்துமாக் கடலின் உச்சியில் ரஷ்யாவை நிலைநிறுத்துவதாகும். இந்துமாகடலின் அதிகாரப்போட்டியில் ரஷ்யாவை முன்னிறுத்தும் இந்தியாவின் நிலைப்பட்டினை அமெரிக்கா ரஸிக்காது. அத்துடன் ஈரானுடனனா ஒப்பந்தமும் அமெரிக்காவை யோசிக்க வைக்கும். இந்துமாகடலில் கேந்திரிய இடம் என்பதுடன் அணுஉலை தொடர்பானதாலும், ஈரான் அணு ஆயுத வல்லமை உடையது என்ற நிலையும் இது முக்கியத்துவம் பெறுகிறது. இந்து மாகடலில் ஈரான் மற்றெறு கேந்திரிய இடத்தை கொண்டிருப்பதும் அமெரிக்காவின் பார்வையை கூர்மைபடுத்தும். ரஷ்யாவுடனான ஈரான் நல்லுறவையே கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, ரஷ்ய பயணத்தொடரில் ஆப்கனிஸ்தான் பாரளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்துள்ள மோடி (TAPI) தஜிகிஸ்தான், ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா எரிகாற்று பாதை ஒப்பந்தமும் அமெரிக்காவை எரிச்சல் படுத்தவே செய்யும். 79 ம்ஆண்டிலிருந்து ரஷ்யா, பினலாடன் என பல கட்ட நடவடிக்கைக்கு காரணமே இந்த எரிசக்தி பாதைக்காகத்தான். ஆசியா வில் இந்த வணிக வாய்ப்புக்காகவே ஆப்கனில் அத்தனை போரட்டத்தையும் அமெரிக்கா மேற் கொண்டது. இந்த எரிக்காற்று பாதையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை மீறிஇந்தியா ஒப்பந்தம் செய்யாது என்றே எதிர்பாரத்திருக்கும். ஆனால் ஆச்சரியமாக மோடி நாவஸ் ஷெரிப்பை சந்தித்தது புதிய திருப்பமாக அமைந்தது. நாட்டின்தலைவர்கள் சந்திப்பு பல கட்ட நடவடிக்கைகு பின்னரே எதிர் பார்க்கமுடி.யும் அதுவும் பாகிஸ்தானுடன பேச்சு வார்தையே தள்ளிகொணடு போகும் நிலையில் இது எதிர்பார்க்க முடிந்ததல்ல. இந்தியாவின் இந்த நடவடிக்கை ஈரான், ரஷ்யாவுடனான ஒப்பந்தங்கள் ஆரம்பகாலத்தில் அமெரிக்காவுடன் காட்டப்பட்ட சார்பு நிலையிலிருந்து விலகுவதாக பார்க்கலாம்.இந்த பின்னனியில்தான் சுப்பிரமணியசாமி யின் நடவடிக்கைகளைபார்க்க வேண்டும். பாராளுமன்றகூட்ட தொடருக்கு பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளை அதறகு முன்பாக சாமியின் நடவடிக்கையுடன் எப்படி பொருத்த முடியும் என்ற கேளவி எழலாம். இந்தியாவின் திட்டங்கள் அமெரிக்கா தெரிந்து கொள்ளமுடியாதல்ல. அதுவும் ரஷ்யா வுடனா ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட ஒன்றாகும்.

சாமியின் நடவடிக்கைக்கு அடுத்து பாதான்கோட் தாக்குதல் முக்கியமானது. இதன் பின்னனியில் வல்லரசுகள் இல்லாமல் நடந்திருக்காது. பதான்கோட் தாக்குதலில் தீவிரவாதிகள் பெற்றிருக்கும் வெற்றி இந்தியாவின் பலவீனத்தையும் TAPI .ஒப்பந்தம் குறித்த எச்சரிக்கை என்றே பார்க வேண்டியுள்ளது. பதான்கோட் பலவீனமாகவள்ளது தீவிரவாதிகளைவிட வல்லரசுகளுக்கே தெரியும்.இந்தியா- பாகிஸ்தான் உறவு பலப்பட்டுவிடக்கூடாது என்பதில் அன்னிய சக்திகள் கருதும்.

26/11 மும்பய் தாஜ் ஓட்டல் தாக்குதலில் ஹட்லி என்ற அமெரிக்க தீவிரவாதியும் உண்டு.கைது செய்யப்பட்ட இவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க சம்மதிக்கவில்லை. அன்றய வெளியுறவு ஆலோசகர் எம்.கே நாரயணன் அமெரிக்காவுடன் ஒத்துபோன செய்தியும் உண்டு..பதான் கோட் உளவு நிறுவனங்களால் கண்காணிக்கபடும் பகுதியாகும்.

இதே சமயத்தில் சவுதி அரேபியா, ஷியா – சன்னி இஸ்லாமியரிடையேயான கசப்பை பெரிதாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தென்மேற்கு ஆசியாவில் ஈரானில் ஷியா பிரிவினரும், சவூதியில் சன்னி பிரிவினரும் பெரும்பான்மையாகவுள்ளனர் .சவூதி அமெரிக்காவைச் சார்ந்துள்ளது உலகறிந்த செய்தி

40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா எண்ணெய் ஏற்றுமதியை அனுமதித்துள்ளது. எண்ணெய் உலக சந்தையில் இறங்கிவரும் நிலையில் இது சற்று ஆச்சரியமானாதும் கூட. ஈரானும், ரஷ்யாவும் எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்த நாடுகள்.

மூன்றுவாரகாலத்தில் நடந்தேறியிருக்கும் இந்நிகழ்வுகளின் இறுதியாக அமெரிக்காவின் பரம எதிரியான வட கொரியா ஹைட்ரஜன் குண்டை வெடித்துள்ளது. எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானுடனா பேச்சு வார்தையையும் இந்தியா தள்ளிபோட்டு விட்டது.

உலக நாடுகள் புதிய அணிகளாக பிரியப்போகிறதா

இதில் தடுமாறுகிறதா இந்திய அரசு

பொருத்திருந்துதான் பார்க வேண்டும். ——-சா.காந்தி.

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>