shadow

நிலச்சீர்திருத்தச்சட்டம் மீண்டும், அவசரச் சட்டமாக பிறந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, ராஜ்ய சபாவைச் சந்திக்காமலே, மறு பிறவிக்குச் சென்றுவிட்டது. நிச்சயமாக இது தோற்கடிக்கப்படும் என்பது தெரிந்ததால், நாடாளு மன்றத்தில் இதற்கு ஆதரவு தெரிவித்த ஒரே எதிர்க்கட்சி தமிழகத்தின் அதிமுக மட்டுமே. இதனால் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கிறது என்று அக்கட்சியில் தலைவர் சொல்லியிருக்கிறார்.

இந்நாட்டின் பொருளாதாரக் கொள்கை சந்தை பொருளாதாரமாகும். இதன்படி சந்தை சக்திகளே விலையையும் தேவையையும் நிர்ணயம் செய்து கொள்ளும். அரசு இதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். விற்பவற்க்கும் வாங்குபவருக்குமான விருப்ப அடிப்படையே இந்த சந்தையாகும். அரசு இதில் தலையிடக் கூடாது என்பது தான். அதன் மூலம் சந்தை விற்பனையில் மாற்றத்தை உண்டாக்க கூடாது என்பதுதான், இதுதான் “பாலி” ஒப்பந்தப்படி ஏழைகளுக்குத் தரப்படும் உணவு மானியம் சந்தையைப் பாதிக்கும் என்பதே வல்லரசுகளுக்கும், மற்ற அரசுகளுக்குமான போர் முனையாக இருந்தது.

அப்படியானால், தொழில்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தை வாங்கிக் கொடுப்பது மட்டும் உலகவர்த்தக கொள்கையில் குறுக்கிடாதா? தொழில் தொடங்குவோர் தங்கள் முதலீடு செய்யும் தொழில்களை அவர்களுக்கு விட்டு விடுவது தானே முறை. இன்று தக்காளி சந்தையில் கிலோ ரூ.10க்கும், வெங்காயம் ரூ.20க்கும் விற்கப்படுகிறது. இதை விளைவித்த விவசாயயிக்கு இதில் பத்தில் ஒரு பங்கு விலைதான் கிடைக்கும். இப்பொழுது அவர்கள் நிலத்தைக் கேட்கும் அரசு, இந்த இழப்புக்கு என்ன சொல்லப் பேகிறது. காய்கறிகளின் விலை வீழ்ச்சி, பண வீக்கத்தைக் குறைக்க உதவியிருக்கிறது. 5 சதத்திற்கு பணவீக்கம் குறைந்துவிட்டதால் தொழில்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கச் சொல்லி கேட்கின்றனர். நஷ்டம் விவசாயிகளுக்கு, லாபம், தொழில்களுக்கு.

நிலமும், விவசாயிகளும் எப்படி இணைந்து போயிருக்கிறார்கள் என்பது குஜராத்தைச் சேர்ந்தவருக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் எல்லாவற்றையும் பணமாக பார்க்கும் வியாபாரிகள் விற்பதும் வாங்குவதும் மட்டுந்தான் தெரியும்.

விவசாயிகள் பயிரை மட்டுமல்ல, அவர்களும் அந்த நிலத்தில் தான் வேர்பதித்தவர்களாக இருக்கிறார்கள்.நிலத்தை இழந்தால் அவர்கள் ஒன்றும் இல்லாதவர்கள்; எங்கும் போக முடியாதவர்கள்;. அவர்கள் பிரச்சனை பேச வேர்களுடன் இருக்க மாட்டார்கள். முன்பு இருந்ததைவிட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். அவர்கள் நிலத்தை கொண்டு வாழ முடியுமே தவிர, பணத்தைக் கொண்டல்ல. இந்தியாவின் 70 சதமக்கள் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்பவர்கள். இவர்கள அனைவறும் நிலச் சொந்தகாரர்கள் அல்ல. இவர்களில் பெரும் பகுதியினர். நிலமற்ற விவசாயக் கூலிகளே, நிலம் தொழில்களுக்கு போய் விடும்போது இவர்கள் நிலை மிகவும மோசமாக போய்விடும். இவர்களுக்கு நிலத்தையும், விவசாயத்தையும் தவிர வேறு வேலைகள் தெரியாது. நிலத்தை கையகப்படுத்தும் தொழில் நிறுவனங்கள், இவர்களை வேறு தொழில்களில் பயிற்றுவிக்க வேண்டும். வேறு தொழிலில் ஈடுபட உதவ வேண்டும். இது நடக்குமா? நிதின் அயோக் திட்டக்குழுவிற்கு பதிலாக வந்த அமைப்பின், துணைத்தலைவர் அர்விந்தபனாகரியா, தொழில் கூட்டமைப்பினர் கூட்டத்தில், வேலை வாய்ப்பு தரும் தொழில்களில் முதலீடு செய்யபடுவதில்லை யென்று குற்றம் சாட்டுகிறார். அதாவது அதிகம் பேர் வேலைசெய்யும், தொழில்களைத் தொடங்கவில்லையென்று குற்றம் சாட்டுகிறார். இவர்களா, விவசாயிகளைப் பயிற்றுவித்து வாழ்விக்கப்போகிறார்கள்.

ஹஸ்முக்ஷா” என்பவர் மொரார்ஜிதே சாய் அவர்களிடம் பணியாற்றியவர். இவர் IPCL ன் (Indian Petrochemical Company limited) என்ற அரசு எண்ணெய் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றிய IAS அதிகாரி, 70 களில் வதோதராவிலும், மராட்டியத்தின் நகோதன்னிலும் IPCL க்கு நிலம் கையகப்படுத்தியதைப்பற்றிச் சொல்லுகிறார். 1600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தபட்டது என்கிறார். நெருக்கடியில் விற்கப்படும் நிலம் ஏக்கர் 6000 ரூபாயாக இருந்தது. மாநில அரசு 15,000 ரூபாய் என நிர்ணயித்தது. விவசாயிகள் 20,000 எதிர்பார்த்தனர். தரகர்களோ 30,000 கேட்டார்கள். அப்பொழுதுதான் 20,000ல் முடியுமென எதிர்பார்த்தனர். கிராம மக்கள் கூட்டத்தை, மாவட்ட ஆட்சியர் கூட்டினர். இறுதியில் IPCL சார்பபில் இவரைப் மாவட்ட ஆட்சியளார் பேசச் சொல்லியிருக்கிறர். அவர் அங்கிருக்கும் இளைஞனை நோக்கி, என்ன விலை எதிர்பார்க்கிறார், என்று கேட்டிருக்கிறார். அவர் 35,000 கோரியிருக்கிறார். மேலும் கேட்க மீண்டும் மீண்டும் தூண்டினாலும் அவரால் 55,000க்கு மேல்போக முடியவில்லை. IPCL 56,000 கொடுத்து நிலங்களை வாங்கிக் கொண்டது. இது மொத்த திட்டச் செலவில் இரண்டு சதமட்டுமே என்கிறார். IPCLநிறுவனத்திலேயே உயர் வட்டிக்கு முதலீடு செய்யும்படி அவர்களுக்கு யோசனை சொன்னாலும், யாருக்கும் முதலீடு செய்ய தோன்றவில்லை, ஒரிருவர் மட்டுமே தூரத்தில் கொஞ்சம் நிலம் வாங்கிக் கொண்டனர். மற்றவர்களோ, மகள் திருமணம், கடன் அடைப்பது போன்று செலவழித்துவிட்டனர். எனவே இந்த மக்களுக்கென பொறியியல் துறையில் பயிற்சி அளிப்பது. தோட்டகலை கால்நடை போன்ற துறையிலும் பயிற்சியளிக்க திட்டமிட்டதாகச் சொல்கிறார். மேலே சொன்ன படியான நடைமுறையில் 5000 ஏக்கர் வரை கையகப்படுத்தப்பட்டது என்று சொல்கிறார். எனினும் அரசுத் துறையில் பணியென்பது ஒரே இடத்தில் இல்லை. அது போன்றே பயிற்சியளிக்கும் முறைகளும் நடைமுறைக்கு வரமுடிய வில்லை என்று சொல்லும் அவர், 2006ல் சிறப்பு பொருளாதார மண்டலம் சட்டம் வந்தபொழுது நிலம் கையகப்படுத்தும் வழியாக இதனை அன்றை பிரதமருக்குச் எழுதியதாக சொல்கிறார்.

நிலத்தை கையகப்படுத்தும், தொழில்கள் இதில் வேர் விட்டு நிற்கும் மனிதர்களை நினைப்பார்களா ! நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நிலகையகச் சட்டம் 30 கோடி மக்களுக்கு வேலைவாய்பைத் தருமென்கிறார். வெறும கனவுகளை விற்பதையெப்படியேற்க முடியும்? 2013 நிலம் கையகச் சட்டம், நிலச் சொந்த காரர்களின் மறுவாழ்வு பற்றியும் பேசுகிறது. AFFECTEO FAMlLIES என்ற சொல்லுக்கு, நிலச் சொந்தமல்லாத ஆனால் அதனைச் சார்ந்தவர்களையும் பற்றி பேசுகிறது. இத்தனைச் சட்டங்கள் இருந்தாலும், பெரிய அளவுக்கு கல்வியோ, தொழில் அமைப்புகளுடனான அனுபவமோ இல்லாத நிலையில், விவசாயிகள் இந்த சட்டத்தின் பலனைக் கூட எட்ட முடியாது.

மக்களை உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் “மேக் இன் இந்தியா” என்பதெல்லாம் நடைமுறைக்கு வருமேயானால், நிலச் சொந்தகாரர்களை பயிற்றுவித்து அவர்களையும் இத்தொழில்களில் புகுத்துவது என்பது தான் சாத்தியமாகும். சீனாவின் தொழிலாளர் சக்தி, பொதுவுடமை கொள்கையில் கட்டமைக்கப்பட்டது. இன்னும் பொதுத்துறை நிறுவனங்களின் மூலதனம் அதிகம். அதுபோன்ற தொழிலாளர் சக்திகளை உண்டாக்காமல் “ஸ்கில் இந்தியா” என்ற கோஷம் மோடி சொல்வதால் மட்டும் சாத்தியமாகிவிட்டது.

அரசாட்சி (GOVERNESS) என்பது பத்து சதம் கூட இல்லாத நாட்டில், மக்களை வளமைப்படுத்துவதன் மூலமும், மக்கள் சார்ந்து திட்டமிடுவதன் மூலம் தான். புதிய இலக்குகளை எட்ட முடியும். பாதிக்கப்படும் மக்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல், தொழில்களின்/ முதலாளிகளின் நலனை மட்டும் பார்த்தால், தொழிற்சாலைகள் மக்கள் சமாதி மீது தான் நிற்க முடியும். இன்று வரை அரசால் நிலம் வழங்கப்பட்ட தொழில்கள் எப்படி மக்கள் வாழ்வை மாற்றியுள்ளன என்பதனையும் பார்க்க வேண்டும். நோக்கியா, மாருதி,ஹுண்டாய், நிறுவனங்களல் தொழிலாளர் போராட்டங்கள் ஏன் வந்தன? பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் நிலையே விவசாயிகளைவிட மோசமானதென்றால், தொழில்களின் வரவினால், இந்த நாட்டின் வளத்தை இழந்த மக்களுக்கு கிடைத்தது மீண்டும் வறுமைதான் என்றால், இது யாருடைய வளர்ச்சியாக இருக்கும்?

165 மாவட்டங்களில், மக்கள் எதிர்ப்பின் காரணமாக, வன்முறை வெடித்து கொல்லபடுவதும் காயமடைந்தவர்களுமா 252 வழக்குகள் இன்று நிலுவையில் உள்ளன. இந்த நிலை ஏன் என்று ஆராயாமல், அரசு பதிலளிக்காமல், முரட்டுத்தனமாக சட்டத்தை திணிக்க முடியாது. அது வேறு இடத்தில் தான் முடியும்.

பத்தாண்டுகளுக்கு முன்னதாக தனியார் நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட 53,000 ஹெக்டேர் நிலங்கள், இன்று பயன்படுத்தபடாமலே கிடக்கிறது.

ஏதோ மாநில அரசுக்கு பெரிய அதிகாரம் கிடைப்பதாக நம் மாநில ஆளும் கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார். தனியார் கூட அல்ல, பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி மின்நிலையம், 2001ம் ஆண்டில் 8800 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. புதிய அனல்மின் நிலையங்கள் வரப்போவதாக சொன்னார்கள் இன்று அந்த விவசாயிகள் நிலையென்ன? நெய்வேலி நிறுவனம், அனல் மின் நிலையம் அமைக்கப்போவதில்லையென்றுச் சொல்லிவிட்டது. என்ன செய்தது அதிகாரம் பெற்ற மாநில அரசு? பாதி விவசாயிகள் 8 அடி நிலத்தை மட்டுமே பார்த்துவிட்டார்கள். இந்த விவசாய நிலத்திலிருந்து எவ்வளவு உணவுப் பொருள் இந்த 15 ஆண்டுகளில் கிடைத்திருக்கும். இந்த நிலத்தைச் சார்ந்து ஆனால் உடமையற்ற கூலித் தொழிலாளர்கள் என்னவாயினர் அரசுக்குத் தெரியுமா ! பதில் சொல்லுமா !

NLC நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிலம் கொடுத்தவர்களுக்கான வேலைவாய்ப்பை கோரி போராட்டம் நடக்கிறதே ! மாநில அரசுக்குத் தெரியாதா ! உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும். பொதுத்துறை நிறுவனமே கெட்டிதட்டி நிற்கிறதே. அதுமட்டுமல்ல. இந்த பிரச்சனையை தீர்க்க 2 கோடி செலவில் ஒரு ஆலோசனை நிறுவனத்தையும் அணுகியுள்ளது NLC அரசுகளுக்கு ஏழைகள் வேண்டாதவர்களே !

1960களில், வைகை அணையைக் கட்ட 13 கிராம மக்கள் தங்கள் நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அன்றே பெருந்தலைவர் காமராஜர், விவசாயிகளுக்கு ஒவ்வொருவருக்கும் 2 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வழங்கினார்கள். எனினும், நிலம் மற்றப்பட்ட பயிர் காய்ந்து போவது போல இந்த விவசாயிகள் பட்டுப் போனார்கள். மக்கள் நலம் பேணிய போதே நிலை இதுதான். நிலத்திலிருந்து அன்னியப்படும் விவசாயி உயிர்பிக்க அங்கேயே வழியிருக்க வேண்டும்.

இது சட்டமாகவோ, திட்டமாகவோ பார்க்க முடியாது. பண்பாட்டு ரீதியான மக்கள் மீதுள்ள படிமம். இதைப் பணம் கொடுத்து ஈடுகட்ட முடியாது.

சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் 2006ன் படி பெருமளவிலான நிலங்கள் கையகப்படுத்தபட்டன. இந்த மண்டலங்கள் மூலம்தான் ஏற்றுமதியை ஊக்குவிக்கப்போவதாக அரசு சொன்னது. ஆனால் வாங்கப்பட்ட நிலம், ரியல் எஸ்டேட் வணிகமாகியது. இந் நிலத்தைக் காட்டி பெரும் வங்கிக் கடனும் பெறப்பட்டு வேறு தொழில்களில் முதலீடுகள் செய்யப்பட்டன. வரியும் இல்லை. ஏற்றுமதியும் இல்லை. இவ்வாறு சொல்லுகிறது CAGயின் அறிக்கை அரசு என்ன செய்தது என்று கேட்கத் தோன்றுகிறது. இந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகள், SEBI நிறுவனம் போன்றவை தொழிலதிபர்களிடம் தோற்றவர்கள் தானே !

வேலைவாய்ப்பு பெருகும் என்கிறத அரசு விவசாயத்தைச் சார்ந்து 70 சத மக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு சரியான விலை கிடைத்தாலே, அரசு “உற்பத்தி” செய்யப்போகிற வேலைவாய்ப்பை விட அதிகமாக வாய்ப்பு கிடைக்கும். நிலம் சார்ந்து யோசிக்கட்டும் அரசு பணம் சார்ந்தல்ல.

Author

pesot

Related Posts

Comments

  1. K.GURUSWAMY    

    பெருந்தலைவர்.காமராசர்,மனிதப் புணிதர் மொரார்ஜி தேசாய்,ஜவஹர்லால் போன்றவர்கள் மக்கள் நலன் சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டார்கள்.இன்று பலறும் பன்னாட்டு நிறுவனங்களின் முகவர்களாக செயல்படுகுன்றார்களோ ? என்ற ச்ந்தேகம்,அச்சம் எனக்குள்ளது.தண்ணீர் விட்டா வளர்த்த்தோம் ? கண்ணீர் விட்டே வளர்த்தோம் சர்வேசா ! என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகறது.

Leave a Reply to K.GURUSWAMY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + five =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>