shadow

தமிழகம் காட்டுப்பள்ளி மற்றும் உடன்குடி மின்நிலையங்களுக்கான ஒப்பந்த புள்ளிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

காட்டுப்பள்ளி(எண்ணூர் SEZ), ஒப்பந்தம் BHELக்கு வழங்கப்பட்ட பொழுது சீன கூட்டமைப்பு நிறுவனம், BHELக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்தது. திட்டத்திற்கான கடன் பகுதியையும், ஒப்பந்த தாரரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டுமென்பதும், ஒப்பந்த புள்ளியின் நிபந்தனையாகும் BHEL வடசென்னை மின்திட்டத்தில் ஏற்படுத்திய கால தாமதமும் அதனால், திட்டச் செலவு உயருவதற்கான காரணத்தின்படி BHEL போட்டியிலிருந்து விலக்கப்பட வேண்டுமென வழக்கைத் தொடுத்தது சீனா கூட்டமைப்பு. எனினும், இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

உடன்குடி மின் திட்டத்திற்கும் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த புள்ளிகள், காட்டுப்பள்ளி திட்டத்தைப் போலவே சீன கூட்டமைப்பும், BHEL மட்டுமே. சீன கூட்டமைப்புக்கு திட்டம் வழங்கப்பட்டதாகவும், பின்னர் தான் ஒப்பந்தபுள்ளியே ரத்து செய்யப்பட்டதாக அறிக்கைகள் சொல்கின்றன. இந்த திட்டம் குறித்த விவாதம், அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

24,பிப்ரவரி 2012, சட்டமன்றத்தில், இதற்கு முந்தைய அரசை விமர்சித்து, உடன்குடி திட்டத்தை தமிழக அரசே நிறைவேற்றப் போவதாகவும், இதற்காக 9083 கோடி ஒதுக்கப் போவதாகவும் அரசு அறிவித்தது.

உண்மையில் 2007ல் BHEL உடனான கூட்டு முயற்சி ஒப்பந்தமாக 2X800என 1600 மெகாவாட் திட்டமாகும். BHEL தனது பெயரிலேயே இதற்கான சுற்றுச்சூழல். கடற்கரை பகுதி அனுமதியெல்லாம் பெற்றிருந்தது. 2012ம் ஆண்டிலேயே இதற்கான திட்டத்திற்கான ஆலோசகர் நியமிக்கப்பட்டாலும். ஒப்பந்தம் மூன்றாணடுகளுக்கு பின்னும் இன்றும் வழங்கப்படவில்லை. அத்துடன் திட்டத்தின் நிறுவுத் திறனும் 1600 மெகாவாட்க்கு பதிலாக 1320 மெகாவாட் (2X660) குறைக்கப்பட்டுவிட்டது. இதேபோல தான் காட்டுப்பள்ளி திட்டமும் 1600 மெகா வாட்க்கு பதிலாக 1320 மெகாவாட் (2X660) ஆக குறைக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குற்றம் சொல்கின்றனவே தவிர திட்டம் நிறைவேற ஆக்கபூர்வ நடவடிக்கைகள் இல்லை.

சீன கூட்டமைப்பு,BHEL ஐப் பற்றி குற்றம் சொன்னாலும், இந்த கூட்டமைப்பில் உள்ள Trishe என்ற நிறுவனத்தின் மொத்த மூலதனமே ஒரு லட்சம் தான். சீன நிறுவனங்களுக்கான ஏஜென்சி நிறுவனமாகக் கூட இருக்க முடியாத நிலையில், இந்தக் கூட்டமைப்பில் இதன் பங்கென்னயென்பது கேள்விக் குறியதே.

ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதற்கு காரணங்கள் வலுவாக இல்லாத நிலையில், இதன் பின்னணி நமக்கு பல சந்தேகங்களை எழுப்புகிறது. ஏனெனில், எதிர்கால மின்கட்டணம் என்பது வாரியத்தின் சுய உற்பத்தியைச் சார்ந்து இருக்கிறது. இந்நிலையில், இத்திட்டங்கள் தள்ளிப் போவது நமக்கு கவலையளிக்கிறது. அனுமதிகள் பெற்று மூன்றாண்டுகளுக்குப் பிறகும், இது இன்னமும் தொடங்கப்படவில்லை என்பதுதான்.

நாம் கணிக்க முடிந்ததெல்லாம், நாடாளுமன்றத்தில் இன்று நிலுவையில் இருக்கும். மின்சாரச் சட்டத்திருத்தம் காரணமாக இருக்க கூடும். இந்த திருத்த சட்ட மசோதா, நகர்ப்புற வினியோகத்தை தனியாருக்கு அளிக்க வகை செய்கிறது. இத்தனியார் நிறுவனங்களே மின்சாரத்தைக் கொள்முதல் செய்து கொள்ள வேண்டிய நிலை வரும்பொழுது, அரசுத்துறை நிறுவனமான மின்வாரியம், தனது கிராமப்புற வினியோகத்திற்கு மேலும் புதிய மின்சார உற்பத்தி தேவைப்படாமல் போகலாம்.புதிய உற்பத்தி நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும்பொழுது மின்சார வாரியத்தின் மின் வினியோகப் பகுதி மின் தேவையின் பெரும் பகுதி தனியாருக்கு போயிருக்கும். உடன்குடி மின்சாரத்தை தான் பயன் படுத்தமுடியமல் வாரியம், விற்க வேண்டி, புதிய வணிகத்தில் இறங்க வேண்டியிருக்கலாம். வாரியம், அதிக கடன் சுமையில் தள்ளாடும் நிலையில், இந்த முயற்சியை அரசு கைவிட நினைத்திருக்கலாம். இதனை வெளிப்படையாக அறிவிக்க நிச்சயமாக இது நேரமல்லதான்.

இதுதவிர வேறு ஒரு செய்தியும் உண்டு. IEEEMA(Indian Electronics Electrical Equipment Manufacture Association) இந்தியாவின் மிகப்பெரிய அமைப்பாகும். இவ்வமைப்பு, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜிட்டோவல்க்கு, சீன மின்சாதனப் பொருள்களைத் தடை செய்யக் கேட்டுள்ளது. Scada என்ற (Supervisory Control and data acquition) அன்னிய நாட்டிற்கு தரப்பட்டல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக முடியும். இதன்மூலம், நாட்டின் மின் வினியோகத்தை வெளிநாட்டு சக்திகள் கையாள முடியுமென்று தெரிவிக்கிறது. 2013-14 ல் இறக்குமதி செய்யப்பட்ட 58,384 கோடி மின் உற்பத்தி சாதனங்களில், 22,680 கோடி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருகிறது. அத்துடன் ஆண்டுக்காண்டு சீனாவிலிருந்து இறக்குமதி 34.57 சதம் அளவுக்கு வளர்ச்சி கண்டு வருகிறதென்றும் தெரிவிக்கிறது.

எனினும், உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தங்கள் இருக்கும் நிலையில் இது சாத்தியமாயென நாம் கணிக்க முடியவில்லை. இதுபோன்ற ஒற்று வேலை சீனாவிலிருந்து தான் வருகிறது என்று சொல்லிவிட முடியாது. இதுபோன்ற நிலை அமெரிக்காவிலும் உண்டு.

ஆனால், தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் பெருமளவில் சீன தயாரிப்பாக இருக்கும் நிலையில், மின்சார உற்பத்தி நிலையங்கள் ஒப்பிட்ட அளவில், அவ்வளவு முக்கியத்துவமாக கருதமுடியவில்லை. இந்தியாவில் தயாரி (Make in India) என்பதற்கு பதிலாக, இந்தியாவிற்காக தயாரி (Made for India) என்ற மத்திய வங்கியின் ஆளுனர் ரகுராம்ராஜன் வாதம் சரியானதாகவே இருக்கும் போலுள்ளது.

இந்தப் பின்னணி ஒருவேளை உடன்குடி ஒப்பந்தம் தள்ளிபோவதற்கு காரணமாகவும் இருக்ககூடும். ஏனெனில், இந்திய பெருங்கடல் மற்றும் மேற்கு, கிழக்கு நாடுகள் உறவில் இந்தியா பெருமளவில் அமெரிக்கா பக்கம் சாய்ந்திருப்பதும், சீனாவுடனான உறவு கெட்டி தட்டி வருவதையும் பார்க்க முடியும்.

எப்படியானாலும், மின்சாரம், ஏழை மக்களிடமிருந்து அன்னியப்பட்டு வருகிறது.

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 18 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>