shadow

உலக அரசில் அரங்கில் இன்று கூர்மையாகப் பார்க்கப்படும் விஷயம். சீனா ஆரம்பித்துள்ள Asian Infrastructural Investment Bank –AIIB என்ற ஆசிய கனரக முதட்டு வங்கி தான். புவிசார் அரசியலில் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஆசியாவே சந்தைப் பொருளாதாரத்தின் எதிர்கால மையம்.

கடந்த 30ந்த தேதியுடன் முடிவடைந்த காலத்தில், 46 நாடுகள் சீனாவின் வங்கியில் அடிப்படை உறுப்பினராக (Core group) சேர்ந்துள்ளன. இதில் இந்தியாவும் அடங்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து என “ஈரோஜோன்”ன் ஜாம்பவான்களும் இந்த வங்கியில் இணைந்துள்ளன. அதுவும் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இங்கிலாந்தும் இணைந்துள்ளது.

இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் 1944ல் அமெரிக்காவின் “Brettan Wood” நகரில் நடந்த கூட்டமுடிவில் துவக்கப்பட்ட உலகவங்கி, உலக நிதியம் (IMF) இரண்டினையும் Woods சகோதரிகள் என்றழைப்பது வழக்கம். இந்த இரு நிதி அமைப்புகளும் தான் இரண்டாம் உலகப்போருக்கு பின் உண்டான பல புதிய நாடுகளை, தனது பொருளாதார சிலந்தி வலைக்குள் சிக்க வைத்து 60 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தின. இந்த இரு நிதி அமைப்புகளும் கடன் வழங்க அமெரிக்க டாலர் மட்டும் சில காலத்திற்கு பிறகு போதுமானதாக இல்லை. எனபே தான் “உலக நாணய கூடை” என்ற நான்கு நாடுகளின் நாணயத்தினை உண்டாக்கியது. இதில் அமெரிக்காவின் டாலர், ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘ஈரோ’. இங்கிலாந்தின் ‘ஸ்டெர்லிங்’, ஜப்பானின் ‘யென்’ உள்ளடங்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருந்தாலும், இங்கிலாந்தின் நாணயம், ஈரோவுடன் சேரவில்லை. இந்த நாணயக் கூடையில், ஈரோவின் பெரும்பங்கு வகிக்கும் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உடன், இங்கிலாந்தும் AIIIB யில் சேர்வதுதான் அமெரிக்காவின் அச்சத்திற்கு காரணமாகிறது. நாணயக் கூடையில் எஞ்சியிருப்பதுயென்னும், டாலர் மட்டுமே AIIBயிலும் பங்கு வகிக்கவில்லை.

ஜப்பானுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக ராஜ்ஜிய உறவுகள் தொய்வானவை. அத்துடன் தெற்கு சீனா கடலில், சீனாவின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பை ஜப்பான் எதிர்க்கிறது. அது மட்டுமல்லாது இந்த பகுதியில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளான, மலேசியா, மையன்மார், சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், லாவோஸ், கொரியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா என பத்து நாடுகளும், சீனாவின் கடல் ஆதிக்கம் பற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வியட்நாமின் கடல்பகுதியில் இந்தியா எண்ணெய் கிணறு அமைக்க சீனா, வியட்நாம், இந்தியாயென தகராறும் உண்டு. சீனா, கடல் பகுதியைத் தூர்த்து புதிதாக தீவை உண்டாக்கியது. அதில் விமானத் தளமும் அமைத்தது. இதனால் பவளப் பாறைகள் அழிந்து போனதாக 10 நாடுகளும், கூட்டாக எதிர்ப்புத் தெரிவித்தன. என்றாலும் இதில் பெரிய மாற்றங்கள் வரவாய்ப்பில்லாது போகும்.

இதுபோன்றே இந்தியாசீனா எல்லை தகராறு நீண்டகாலமாகவே உள்ளது. அதுபோன்றே திபெத் க்கும் சீனாவிற்கும் இடையே உறவும் சுமுகமாக இல்லை.

இத்தனைக்கும் இடையில்தான் AIIB வலுவடைந்துள்ளது. நாணயக் கூடையின் ஈரோவும் ஸ்டெர்லிங்ம், இன்று AIIB யிலும் உள்ளன. உலக நாணயமாக இன்று டாலர் விளங்கி வருவதால் தான், அமெரிக்க வங்கியில் பன்நாட்டு செலவாணிகளும் மூலதனமாகவுள்ளன. இதுபே அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு அடிப்படை ஆதாரம். இந்த மூலதனங்களைக் கொண்டே அமெரிக்கா பெருமளவில் கடனும் பெற்று வருகிறது. இந்த உலக நாணயம், மாற்றப்பட்டாலோ அல்லது மாறாக AIIBயின் நாணயம் வந்தாலோ அமெரிக்காவின் வலிமை படுவேகமாகக் குறையக் கூடும். அதே நேரத்தில் உலகின் மறுதுருவமாக சீனா உருவாகலாம். சீனாவின் ஆதிக்கம் பெருகவே செய்யும். இந்த நிகழ்வுகள், இந்தியாவை பெரிதும் பாதிக்கப்போகின்றன. கடந்த தேர்தலுக்குப் பிறகு, மோடி அரசு அமெரிக்கா சார்பாக பலமுடிவுகளை எடுத்து வந்துள்ளது. மேற்கு நோக்கி சாயும் போக்கையும் கடைப்பிடித்து வருகிறது. பதவியேற்றவுடன், ஜப்பான், அடுத்து ஆஸ்திலேலியா பிரதமர் வருகை, தொடர்ந்து அமெரிக்க பயணம் என்று இந்தியா சீனாவுடனான எல்லைத் தகராறு பற்றி சீனாவை அச்சுறுத்த தொடங்கியது. சீனா தலைவரின் வருகை கூட வெற்றிகரமாக அமையவில்லை. இந்தியா, பாகிஸ்தானை அச்சுறுத்தி கையகப்படுத்தும் போக்கையே காட்டியது. பாகிஸ்தானை மற்றொரு நாடாக பார்க்க மோடியின் மத அரசியல் இடம் தரவில்லையென்றே சொல்ல வேண்டும். பாகிஸ்தானை அமெரிக்காவின் ஆதரவிலிருந்து விலக்கி விடவும் சீனாவை சமனப்படுத்த போவதாகவே இந்தியாவின் போக்கு அமைந்தது. ஆனால் சீனா, பாகிஸ்தானுக்கு 47 பில்லியன் டாலர் கடனுதவியை அளிக்க முன்வந்துள்ளது. இது மிகப்பெரிய அன்னிய மூலதனமாகும். பாகிஸ்தான் இந்தியாவின் பொருளாதாரத்தில் எட்டில் ஒரு பங்குதான். அமெரிக்காவுடனான பாகிஸ்தான் ஒப்பந்தம் கூட 2001 ஆண்டிலிருந்து இதுவரை 10 பில்லியன் டாலருக்கானது தான். ஒப்பீட்டளவில் 47 பில்லியன் டாலர் என்பது பாகிஸ்தானின் ஒட்டு மொத்த பட்ஜெட்டைவிட அதிகமானது. இந்திய பொருளாதாரத்துக்கு இது சமன் செய்யப்பட்டால் (எட்டு மடங்கு) 370 பில்லியன் டாலராகும். இந்தியாவின் அன்னியச் செலாவணியைவிட அதிகம். இதில்,11 பில்லியன் டாலர் பாகிஸ்தான் காஷ்மீரம் வழியாக காட்டர் வரை பெருவழிச் சாலை அமைக்கவுள்ளது. சீனாவின் சரித்திர கால பட்டுவழிச் சாலையை அமைக்க வழி வகுக்றிது. இதன்மூலம்இ தலைவழியாக, தென் மேற்காசிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்கா, ஐரோப்பியாவுக்கும் இதனை நீட்டிக்க முடியும். அத்துடன் இந்த சாலை, இந்துமாக்கடல் பகுதியில் காட்டார் துறைமுகத்தையும் இணைக்கும். இது இந்தியாவிற்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் சீனாவின் கைபொம்மை போன்ற நாடாகவே மாறிவிடும். எஞ்சிய 36 பில்லியன் டாலரும், பாகிஸ்தானின் மின்சாரத்துறையில் முதலீடு செய்யப்போகிறது சீனா. இந்தியாவினால் அச்சுறுத்த முடியாது நிலைக்கு பாகிஸ்தான் சென்று விடும்.

மாறாக, அமெரிக்க, திபெத் பிரச்சனை எழுப்பக்கூடும். ஆனால் அதில் வலு இருக்காது. இதனை பெரிதுபடுத்த இந்தியாதான் முயல வேண்டும். இது இந்திய சீனா உறவில் புதிய தொய்வை உண்டாக்கும். இந்தியா தென் மேற்காசியாவின் இஸ்ரேலாக மாற்ற முடியுமா என்பதே மேற்கு நாடுகளின் எதிர்பார்ப்பாக இருக்கும். இந்தியா “சார்க்” நாடுகள் என்ற கூட்டமைப்பை விட நேபாளம், பூட்டான், பங்களாதேசம் என மண்டல நாடுகளை இணைக்க முயற்சிக்கிறது. இதன் ஒருபகுதி தான் வங்கத்தேசத்துடனான “என்கிலேவ்” பகுதிகளை சீரமைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. நேபாளத்தின் நிலநடுக்கத்தில் பெரிய உதவியைச் செய்து வருகிறது. இலங்கை, மாலத்தீவுகளை அமெரிக்காவின் தீர்வுக்குத் தள்ளிவிட்டு, ஒதுங்கிக் கொள்ளவும் செய்து வருகிறது. இந்துமாக்கடலில். பழைய கடல் வழிபட்டு சாலையமைக்க சீனா முயன்று வருகிறது. இதன் காரணமாகவே 1979லிருந்து ஈரானுடனான பொருளாதாரத் தடையை நீக்கி சுமுக நிலையை உண்டாக்க அமெரிக்கா இறங்கி வருகிறது.

உலக வங்கியும், நிதியமும்., வளரும் நாடுகளில் கடன் அளிக்கிறோம் என பொருளாதாரக் கொள்கையை வளர்ந்த நாடுகளின் நலனுக்கேற்ப வடிவமைத்தும் வந்துள்ளது. மூன்றாம் உலக நாடுகள் இரண்டாம் உலக போருக்கு பின் விடுதலை பெற்றவை. இவற்றில் இனப்பகை, எல்லைத் தகராறு, அரசியல் ஆதிக்கம், ராணுவ ஆட்சி என பல வகையான குழப்பங்களையும் விளைவித்து கடனில் மூழ்கடித்தன. இந்நாடுகளின் வளங்களை வளர்ந்த நாடுகள் முழுமையாக சுரண்டிவந்தன. ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து உலகவங்கியில் தலைவராக அமெரிக்கரும், நிதியத்தின் தலைவராக ஐரோப்பியருமே இருந்து வருகின்றனர். 80ம் ஆண்டுகளின் இறுதி வரை அமெரிக்க பொருளாதாரத்திற்கு எதிராக ஈடுகொடுத்து வந்த ரஷ்ய கூட்டமைப்பு 89ல் தகர்ந்தது இருதுருவ புவிசார் அரசியல் ஒருமுனை அதிகாரமாக மாறிப் போயிற்று. இதுதான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்காவும் வளர்ந்த நாடுகளும் உலகை ஆட்டிப் படைக்க முடிந்தது. 1978ல் தொடங்கிய ஆப்கான் போர், ஈரான், ஈராக் போர் வரிசையாக இந்தோனேசியா எகிப்து, லிபியா, டுனீஸ்யாயென பல நாடுகளில் அரசியல் மாற்றங்கள் எனத் தொடர்கின்றன.

AIIBயின் வரவு உலக வங்கிக்கும், நிதியத்திற்கும், எதிர் வினையாற்றும், சீனாவின் அன்னிய செலாவணி 4 டிரில்லியன் டாலராகவுள்ளது. (4000 பில்லியன்) இந்த கையிருப்பு சீனாவை மற்ற நாடுகளின் கனரக தொழில்களில் முதலீடு செய்ய உதவ முடியும் என்றாலும், நீண்டகாலமாக மூலதனத்தின் மூலம், நாட்டின் கொள்கைகளில் கைபதித்து வந்துள்ள உலக வங்கி போன்று செயல்படும் பக்குவமுண்டா என்பது சந்தேகமே. உலக வங்கியும் நிதியமும் பல நாடுகளின் வல்லுனர்களை வங்கியில் வேலைக்கு வைத்துக்கொண்டது. இவர்கள் அந்த நாட்டின் வளங்களை வளைக்க இந்த அமைப்புகளுக்கு உதவி வந்தனர்வருகின்றனர். இதுபோன்று AIIB என்ற நடைமுறையைக் கையாளப்போகின்றன என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேபோல் வளர்ந்து நாடுகளின் தொழில் நுட்பத்துடன் போட்டியிடுமளவுக்கு சீனா தொழில் நுட்பம் வளர்ச்சியடையவில்லை. எனினும் மூன்றாம் உலக நாடுகளுக்கு போதுமான தொழில் நுட்பங்கள் சீனாவிடம் உள்ளன. ரஷ்யாவின் தொழில் நுட்பம், அமெரிக்கவுடன் போட்டி போட முடியும். பொருளாதார வலிமை குறைந்து போனதுதான் ரஷ்யாவின் பலவீனம். ரஷ்யா அமெரிக்காவை அங்கீகரிக்காதது போலவே சீனாவையும் அங்கீகரிக்காமல் போகலாம். உக்ரைன், ஈரான், சிரியா குழப்பங்களில் ரஷ்யா தனது வலிமையைக் காட்டியுள்ளது. இருதுருவ புவி அரசியல் என்பதில்லாமல் மூன்று அல்லது நான்கு துருவமாக மாறலாம். உலகின் போக்கை இனிவரும் காலத்தில்தான் கணிக்க முடியும். ஆனால் எந்த நிலையிலும் இந்தியா இந்த துருவங்களில் ஒன்றாக இருக்க முடியாது. இராணுவ தளவாடங்களிலிருந்து சிறிய ‘சிப்பு’ வரை அன்னிய இறக்குமதியை நம்பியுள்ள இந்திய பொருளாதார வல்லமை பெற முடியாது. வெறும் சந்தையாக மாறலாம். எதிர்காலத்தில் இந்தியாவை ஒன்றாக வைத்திருப்பதே பெரிய விஷயமாக மாறிப் போகவும் செய்யும்.

வரும் தலைமுறைக்கு ஒரு பாதுகாப்பற்ற நாட்டைத்தான் நாம் விட்டுச் செல்வோமா!

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + four =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>