shadow

கல்வி, சுகாதாரம், பெண்கள், குழந்தைகள் நலம் சார்ந்தவையே. சமூக நலம் என்று வகைப்படுத்தப்படும். நமது அரசியல் அமைப்புச் சட்டம், மக்கள் நலம் சார்ந்த இந்த துறைகளை மாநிலங்களின் வரம்புக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. எனினும், மத்திய அரசு, இந்த நலம் குறித்து நிதி ஒதுக்கீடு செய்வதும், இது குறித்த பொது நலத் திட்டங்களை அறிவிப்பதும், மத்திய அரசே இந்த சேவையில் ஈடுபடும். அதனால் தான் CBSE கேந்திரிய வித்யாலயா, IIT, IIM ,ISE போன்ற நிலையங்கள் மத்திய அரசினால் துவக்கப்பட்டவை. அது போன்றே University Grant Commission AICTE போன்ற நிறுவனங்களும் நாடு முழுவதுமான உயர் கல்வியின் மேம்பாட்டில் ஈடுபடுகிறது.

இந்த பட்ஜெட்டில், உயர்கல்விக்கென 26,855 கோடியை ஒதுக்கீட்டுள்ளது. கல்விக்கென 68,968 கேடி. கடந்த ஆண்டை விட இது குறைவானதே. மத்திய அரசு 6aIIMS, இரண்டு IIT, இரண்டு IIM கல்வி நிறுவனங்களைத் தொங்கப் போவதாக சொல்லுகிறது. இது தவிர 75,000 ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளை உயர்த்த போவதாகவும், 5 கி.மீக்கு ஒரு பள்ளி என்ற கொள்கையும் தெரிவித்துள்ளது. பெரும்பகுதியான கல்வி நிலையங்கள் தனியார் வசம் மாட்டிக் கொண்டிருக்கும் போது அரசின் ஒதுக்கீடும், கொள்கையும் ஒத்துப்போகவில்லை. அரசின் அறிவிப்புகளும் பட்ஜெட் ஒதுக்கீடுகளும் பெரும்பகுதி மக்கள் சார்ந்த விஷயங்களில் பெரிதும் வேறுபடுகின்றன. சுகாதாரத் துறையை பார்த்தால் இது விளங்கும்.

Clean India என்பது நரேந்திர மோடியின் பெயரால் பெரிதுபடுத்தப்படும் திட்டம். நிதியமைச்சரே 6 கோடி கழிப்பறைகள் கட்டப் போவதாகவும், இந்தாண்டு 50 லட்சம் கழிப்பறைக் கட்டப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கிறார். முதல் நாள் பிரதமர் மோடி Clean India பற்றி உரையாற்றுகிறார். அடுத்த நாள் நிதியமைச்சர் இதற்கான நிதி ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டில் இருந்ததில் பாதியாக்கி விட்டார். 14-15-ல் 12,100 கோடியாக இருந்த ஒதுக்டு, இந்த பட்ஜெட்டில் 6,236 கோடியாகி விட்டது. 14வது நிதி கமிஷன் படி மாநிலங்களுக்கான ஒதுக்கீடு, 32 சதத்திலிருந்து 42 சதமாகிவிட்டதால் இதனை மாநிலங்களில் தலையில் சுமத்துகிறது. மத்திய அரசு. ஆனால் நிதியை பாதியாக்கி விட்டு 8 கோடி கழிப்பறை என்பது எப்பது சாத்தியம்? இதில் கூட கார்ப்பரேட்களுக்கு சலுகை ஒதுக்கீடு செய்கிறது.மத்திய அரசு. கழிப்பறை கட்டும் நிறுவனங்களுக்கு வருமான வரியில் முழுச் சலுகை அளிக்கிறது.

ICDS என்ற (Integrated Child Development Scheme) குழந்தைகள் நலத்திற்கான நிதி ஒதுக்கீட்டை பாதியாக்கி விட்டது. 14-15ன் திருத்தப்பட்ட மதிப்பீடு 16,316 கோடியென்றால் வரும் 15-16ம் ஆண்டிற்கு 8,000 கோடியென குறைத்துள்ளது.

பள்ளிகளில் பெரிதும் போற்றப்படுகின்ற சத்துணவு திட்டத்திற்கான நிதியில் கூட சிக்கனத்தை காட்டியிருக்கிறது மத்திய அரசு. நடப்பாண்டல 11,770 கோடியை 9,236 கோடியாக்கிவிட்டது.

அது மட்டுமல்லாது அரசு அறிவித்திருந்த 12 சமூக நலத்திட்டங்களை (பின் தங்கிய மண்டலங்களுக்கான நிதி போன்றவை) ஒரே அடியாக நிறுத்தி விட்டது. இதில் 6000 மாதிரி பள்ளிகளும் அடங்கும்.

6 கோடி வீடுகளை அடுத்த ஏழாண்டுகளில் கட்டப் போவதாகச் சொல்லும் அரசு. வருமாண்டிற்கான நிதி ஒதுக்கீடு. 12,393 கோடியிலிருந்து 14,000 கோடியாக மட்டுமே உயர்த்தியிருக்கிறது.

பெண்கள் குழந்தைகள் நலம் 18,588 கோடியிலிருந்து 10,382 கோடியாக தாழ்ந்துள்ளது. பள்ளிக் கல்வி திட்டமும் 46,805 கோடியிலிருந்து 42,219 கோடியாகி விட்டது.

முதல் நாள், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம், முந்தைய அரசின் தோல்வித் திட்டத்தின் அடையாளச் சின்னம் என பிரதமர் மோடி வர்ணித்தார். அடுத்த நாள் நிதியமைச்சர் இதற்கான நிதி ஒதுக்கீட்டை 1,694 கோடி என அறிவிக்கிறார். அதுமட்டுமல்ல, வருமாண்டில் மேலும் நிதி ஒதுக்கீட்டுக்கு வாய்ப்பிருக்குமானால், மேலும் 5,000 கோடி ஒதுக்கவுள்ளதாக உறுதியையும் அளிக்கின்றார். கிராமப்புற வேலைவாய்ப்பு என்பது இது போன்ற திட்டங்களினால் மட்டுமே சாத்தியம். அரசியல் வர்க்கத்தால் இத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தாலும், திட்டம் தவறல்ல. செயல்பாடுதான் குறையென்பதாகும்.

ஏழை மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒரே திட்டம், விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்படுமானால் 2 லட்சம் நஷ்டஈடு என்ற காப்பீட்டுத் திட்டம் மட்டுமே இதிலும் காப்பீட்டுத் துறையை மேம்படுத்துவதிலேயே அரசு அக்கறை காட்டுகிறது. பொது நலத்துறையில் அரசு அறிவிப்புகளை தொகுத்து இதில் அரசின் அக்கறை எந்த அளவுக்கு சாத்தியம் என்பது புரியக்கூடும்.

  • 2022 ஆண்டுக்குள் 6 கோடி வீடுகள் கட்டித் தரப்படும். 2 கோடி நகர்புறத்திலும், 4 கோடி கிராமப்புறங்களிலும் கட்டப்படும்.

  • 2020க்குள் மின்சாரமில்லாத 20,000 கிராமங்களுக்கு மின் வசதி செய்யப்படும். (மின்சாரச் சட்டம் 2003ல் வந்தபொழுது அனைத்து வீடுகளுக்கும் (கிராமங்களுக்கும் அல்ல) 2012க்கு மின்வசதி செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அரசுதான்.

  • 1,78,000 கிராமங்களை இணைக்கும் ஒரு லட்சம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்படும்.

  • 6 கோடி கழிப்பறைகள் நடப்பாண்டில் கட்டப்படும்.

கழிப்பறையும் 6 கோடி, வீடுகளும் 6 கோடி, மின் வசதியே இல்லாத கிராமம் 20,000 எப்போது சாலை வசதி சாத்தியம்? ஆனால் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் தோல்வியடைந்த திட்டமென்கிறது அரசு. கிராம மக்களை ஒள்ளடக்காத இந்த வசதிகள் நிறுவனங்களின் காண்ட்ராக்ட் பசிக்குத்தான் சரியாக இருக்கும். மக்களுக்கு என்ன அவசர தேவையாக இருக்கிறது என்பது அரசுக்குத் தெரிகிறது. ஆனால், செயல்படுத்த விருப்பம் இல்லை. அல்லது நிறுவனங்களை மேம்படுத்த நினைக்கும்போது மட்டும், கிராமப்புர தேவை நிறைவேற்ற அரசுகள் முயல்கின்றன. இது மக்களுக்காக அல்ல, நிறுவனங்களின் சந்தைக்காக.

 

 

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 9 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>