shadow

திருடுதல், ஏமாற்றுதல் என்பதெல்லாம் வரையறுக்கப்பட்ட தண்டணைக்குறிய குற்றங்கள் என சட்டம் சொல்லுகிறது. கார்பாரேட்களும் இந்த சட்டதிற்கு உட்டபட்டவர்களே. ஆனால் என்ன நடக்கிறது.2007 ல் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் துணை நிறுவனமாக ஆர்.பி.எல் பங்கு சந்தையில் நுழைந்தது. இதன் 75 சத பங்குகளை அதுவே வைத்துக்கொண்டது. ஐந்து சத பங்குகளை ரிலையன்ஸின் பங்குதார்ரான நிக்கிக்கு விற்றது.ஒரு பங்கு 60 ரூபாய் என விற்கப்பட்டது.2007 ன் இறுதியில்,இந்த பங்குகளின் விலை 15 தினங்களுக்குள் 290 ரூயாயை யெட்டியது. உடனே ரிலையன்ஸ் 10 கோடி பங்குகளை சந்தை யில் விற்றது.. அடுத்து ஆர்.பி.எல் நிறுவனத்தின் பங்கு களை ரிலையன்ஸ் பங்குடன் இணைத்துவிட்டது. நிக்கி நிறுவனத்திடமிருந்த 5 சத பங்கு களையும் 60 ரூபாய் விலைக்கு வாங்கிக்கொண்டது. ரிலையன்ஸ்க்கு ஆதரவக 12 பங்கு வர்த்தக நிறுவனங்கள் உதவின. இந்த ஏமாற்று வேலை பங்கு நிதி ஆணையத்திற்கு 2007லேயே தெரிந்த்துதான். பங்கு சந்தை ஆணையம் வழக்கை விசாரித்து வந்தது, – வந்தது – வந்தது விசாரித்துக்கொண்டே இருந்தது. முகேஷ் அம்பாணி 10கோடியை அபராதமாக கட்டுகிறேன் வழக்கைத் தள்ளுபடி செய்யக்கேட்டார். 10ஆண்டுகளுக்கு பிறகு முறைகேடாக சம்பாதிக்கப்பட்ட பணம் 447 கோடியைய்யும், 12 சத வட்டி யுடன் கட்ட கடந்த மாத இறுதியில் உத்திரவிட்டுள்ளது இனியென்ன—இருக்கவே இருக்கு மேல் முறையீடு.,.இன்னமும் சில பத்தாண்டுகள் ஆகும். நமக்கும் மறந்து போகும். இப்ப தெரிந்து மட்டும் நாம் என்ன செய்து விட்டப்போகிறோம். 60 ரூபாய் பங்குகளை 290 க்கு இடையில் வாங்கி ஏமாந்தவர்கள் பற்றி எந்த தீர்ப்பும் இல்லை.இதே ரிலையன்ஸ் ஓன்.ஜி.சி.சி க்கு சொந்தமான எண்ணெய் வயலிருந்து எண்ணெய் எடுத்த்தாக 13,000கோடி யளவுக்கு அதன் மதிப்பை மட்டும் கட்டச் சொல்லியிருக்கிறது நடுவன அரசு.துணிவணிகத்தில் இருந்த ரிலையன்ஸ் 90 களில் எண்ணெய் வணிகத்தில் இறங்கியது. தொழில் நுட்பமும், மிகுந்த அனுபவமும் தேவைபடும் இந்த தொழிலில் புதியவர்கள் கால் பதிக்க முடியாது. இது அரசுக்கும் , ரிலையன்ஸ்க்கும் தெரிந்ததுதான். 99ல் ஆண்டு வந்த பா.ஜ.க அரசு கையில் இருந்த ஐ.பி.சி.எல் என்ற அரசு நிறுவனத்தை தனியார் மயமாக்கியது அதாவது ரிலையன்ஸ் மயமாக்கியது. ரிலையன்ஸின் அம்பானி . உலகப் பணக்கார்ரக்கியது அரசு மக்களின் சொத்தின் மூலமாக.குடும்ப எரிக்காற்றுக்கான மானியம், பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு அரசு மறந்து யோய்விட்டது

— -பணம் சட்டத்தையே ஆளுகிறது.

— — — – சட்டம் மக்களை ஏமாற்றுகிறது.

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eighteen =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>