shadow

நீண்ட நாட்களாக கண்டுகொள்ளப்படாத, நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் இந்த கருப்பு பணம் கடந்த தேர்தலிலும் முக்கியத்துவம் பெற்றது. 100 நாளில் முழு கருப்பு பணமும் வெளிக்கொண்டு வரப்படும் என சினமி பாணியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தலைச் சந்தித்த அத்தனை அரசியல் கட்சிகளும், இந்த கருப்பு பணத்தை நம்பித்தான் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த பொது உண்மைதான். ஆகவே கருப்புப்பணமும், அரசியலும் கைகோர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இந்த கருப்புப் பணத்தைப் பற்றி பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார் நிதியமைச்சர். கடுமையான சட்டங்கள் வரப்போவதாக சொன்ன நிதியமைச்சர், வெளிநாட்டில் இருக்கும் தெரிவிக்கப்படாத சொத்துக்கள் இருப்பின், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை 300 சத வட்டி, குற்றத்தை பணமதிப்பாக மாற்றப்படா வாய்ப்பின்மை, சமரச உடன்பாடுகள் கிடையாது என்று சொல்லுகிறார். இதற்கான தனிச்சட்டம் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கொண்டு வரப்படும். மேலும் (Fema) சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுமென்று சொல்லப்பட்டுள்ளது. அதே போல் உள்நாட்டில் உள்ள “பினாமி” சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனையையும் சொல்லுகிறார்.

ஆனால் கருப்பு பணம் வெளிநாட்டில் உள்ளதைவிட உள்நாட்டில்தான் அதிக கருப்பு பணமிருப்பதை அறியமுடியாத அரசல்ல. கருப்பு பணமென்றால் “ஸ்விஸ் வங்கி” கணக்கு என்ற தோரணையே மக்களிடம் தவறாகவே விற்கப்பட்டிருக்கிறது. இந்த யூகத்திற்குயேற்றாற் போல் தான் அன்னிய நாட்டின் சொத்துக்களுக்கு 10 ஆண்டும் உள்நாட்டு சொத்துகளுக்கு ஏழாண்டும் எனறு சட்ட வடிவைச் சொல்லுகிறார். ஒவ்வொரு ஆண்டும் கருப்பு பணம் எப்படிச் சேருகிறது என்பது அரசுக்கு தெரிந்தது தான்.

கருப்பு பணத்தை கையாளுவதற்கான வசதியை வங்கிகளே செய்கின்றன. லண்டனில் உள்ள HSBC வங்கி இந்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளது. இன்று அரசு தெரிவிக்கும் கருப்பு பணம் வைத்திருப்போர் பட்டியலும், இந்த வங்கியிலிருந்து தான் வந்தது. எனவே வங்கி மேலாளர்கள் தேர்வுக்கு தனியான ஒரு அமைப்பையேற்படுத்த விருப்பதாகவும் பட்ஜெட் உரை சொல்லுகிறது.

வெளிநாட்டில் வாங்கப்பட்டிருக்கும் அத்தனைச் சொத்துகளும் Foreign Exchange Regulation Act 1973 வழியாகவே வெளிச் சென்றவைதானே.

உள்நாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர இதுபோன்ற கடுமையான குற்றவியல் சட்டங்கள் தேவைபடவில்லையே. சுகாதார நிறுவனம் ஏமாற்றியதும், சாதாசிட் நிறுவனம் செய்ததும், சட்டம் கண்டுகொள்ளாமல் விட்டதுதானே. பினாமி சொத்துகள் அறிய புதிய குற்றவியல் சட்டமா தேவை?

கருப்புப் பணம் வைத்திருப்போர், பெரும் பணக்காரர்களும், அரசு போற்றி புகழும் தொழிலதிபர்களும் தானே.

ஒரிசாவில் 60,000 கோடிக்கான நிலக்கரியும், இரும்புத்தாதுவையும், ஆதித்யாபிர்லாவும், டாடாவும் கொள்ளையடித்தன. இவை கருப்புப் பணமாகத்தானே மாறும்.

கடும் சட்டங்கள், குற்றங்களைத் தடுக்காது, இருக்கும் சட்டத்தை அமுல்படுத்தினாலே போதுமானது தான்.

இந்த அறிவிப்பு தங்களின் அரசியல் நெருக்குதலுக்கு காரணமானதே தவிர, கருப்புப் பணத்தை மீட்க அல்ல.

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>