shadow

2015 பிப்ரவரியில், டெல்லியில் நடந்தேறியுள்ள Re Invest 2015 என்ற மரபுசாரா மின்சாரம் பற்றிய வணிக மாநாடு, உலகில் முதன்மையானது மட்டுமல்ல. பல கனவுகளை நடுவன அரசுக்கு தந்திருக்கிறது. இந்த மாநாட்டில் 200 மில்லியன் டாலர்களை நிதி ஆதாரம் திரட்டித்தருவதாக நடுவன மின்துறை மற்றும், மரபுசாரா மின்துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்தார். பின்னர் இதுவே 2022-க்குள் இந்தியாவில் ஒரு லட்சம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்திச் செய்யப்படும் என்ற கொள்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். நடுவன அரசின் பட்ஜெட்டில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சாத்தியமாகக் கூடிய அறிவிப்புதானா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

முந்தய அரசு 2010-ல் ஜவகர்லால் நேரு சூரிய ஒளி மின்சாரம் 2022 என அறிவித்தது. இதன்படி 2022-ல் 20,000 மெகாவாட் என இலககு நிர்ணயித்தது. ஆண்டுக்கு 1000 மெகாவாட் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. நிதியாண்டு 2015-ல் 750 மெகாவாட்தான்சாத்தியமாகும். இன்று இருக்கும் மொத்த நிறுவுத்திறன் என்பது 3062 மெகாவாட் மட்டுமே.

தமிழக அரசு 2012-ல் மின்சாரத் தட்டுப்பாடு உச்சத்தில் இருக்கும் பொழுது 3 ஆண்டுகளில் 3000 மெகாவாட் என கொள்கை அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் இன்றுவரை 135 மெகாவாட் சாத்தியமாகியுள்ளது. கொள்கை அறிவிப்புபடி 2000 மெகாவாட் மின்திறனையெட்டியிருக்க வேண்டும். நடுவன அரசின் கொள்கையும் இதுபோன்றே இருக்கப் போகிறதா?

இன்று இருக்கும் தொழில் நுட்பத்தினைக் கொண்டு கணக்கிட்டால் இந்த குறியீட்டுக்கு 6-7 லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படும்.

2022-ல் இன்று இருக்கும் மொத்த 10 லட்சம் மெகாவாட் ஆக உயர்ந்தால், நிறுவுத்திறனாகிய 2,58,000 மெகாவாட் சூரிய ஒளிமின்சாரம் 10 சத மின்சாரத்தினை (நிறுவுத்திறனை) கொண்டிருக்க முடியலாம். அந்த நிலையிலேயே இந்த நிலையற்ற மின்சாரத்தினை நாம் முழுமையாகப் பயன்படுத்தமுடியும். இதற்கான Green Coriander நாடு முழுவதும் அமைக்கப்பட்டாக வேண்டும். அதற்கான திட்டம் காகிதத்தை விட்டு வெளியே வரவில்லை. வெறும் 3000 மெகாவாட் மட்டுமே இருக்கும் நிலையில் பவர் கிரிட் கார்பரேசன், இதில் செலவு செய்யத் தயங்குவது எதிர்பார்க்கக்கூடியதே. 1260 மெகாவாட் அளவுக்கே சூரிய ஒளி நிறுவுத்திறன் உண்மையில் 240 மெகாவாட் அளவுக்கே உற்பத்தியைக் கொடுக்கும் என அமைச்சகம் தெரிவிக்கிறது.

நிதி ஆதாரங்களைப் பொறுத்தமட்டில், 110 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் (சுமார் 6.8 லட்சம் கோடி) ஆண்டுதோறும் 15 பில்லியன் கோடி (93 ஆயிரம் கோடி) தேவைப்படும். இதில் 40 சதம் அன்னிய முதலீடானாலும், உள்நாட்டு முதலீடாக 55,000 கோடி மூலதனத்தை ஆண்டுதோறும திரட்ட வேண்டும். இது தவிர மின் தொடரமைப்பில் செய்யப்படும் மூலதனம் தனியானது. பட்ஜெட் சூரிய ஒளி இலக்குடன் 60,000 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தையும் குறிப்பிடுகிறது. இந்தியாவில் உள்ள சூரிய ஒளித்தகடுகளில் 70 சதம் இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனா தகடுகள் ஒரு வாட்க்கு 60 சென்ட் என்ற நிலையில் மேற்கத்திய நாடுகளின் விலையோ 75-90 சென்ட் வரை செல்கிறது. சூரிய ஒளி மின்சாரத்தின் கொள்முதல் விலையே யூனிட் ஏழு ரூபாய் வரைச் செல்கிறது. மரபு சாரா மின்சாரத்தின் விலையோ இதில் பாதியாகவே இருக்கிறது. ஆக சந்தையில் போட்டி மூலம் இது விற்பனையாக முடியாது. மாறாக, Solar obligation, அதாவது மின் வினியோக நிறுவனங்கள் கட்டாயம் வாங்க வேண்டிய சூரிய ஒளி மின்சாரத்தின் அளவு அதிகரிக்கப்பட்டு, அது நடைமுறைப்படுத்த பட வேண்டும். தமிழகத்தில் இது இரண்டு சதமாகயிருக்கிறது. பிறமாநிலங்களில் அதிகபட்சமாக ஒரு சதமாகவும் அதற்கு கீழேயுமே உள்ளது. இது மேலும் கூட்டப்பட்டால், பயனீட்டாளர் முனைவிலையென்பது மேலும் உயரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

மரபுசாரா மின்சாரம், நிச்சயமாக ஊக்குவிக்கப்பட வேண்டும். இதில் ஆய்வுப்பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும், இறக்குமதியென்றால், இந்தியப் பொருளாதாரம், வெறும் கனவு மட்டுமே காணமுடியும். எட்டமுடியாத வெறும் விளம்பர முழக்கமாகவே இந்த அறிவிப்புகள் இருக்கும். கனவு மெய்ப்பட…

 

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>