shadow

மின்வாரியம் ஒருலட்சம் கோடிக்கு மேலனா நட்டத்தில் இருக்கிறது. தனியாரிடம் வாங்கிய மின்சாரமும், அதில் நடந்திருக்கும் ஊழலுமே இந்த அளவுக்கான நட்டத்திற்கு காரணம் என்பது வெளிப்படையானது. கொள்முதல் மூலமாக நடந்த ஊழல் என்பது போய் தற்போது மின்சாரம் வாங்க எந்த ஒப்பந்தமும் இல்லாத, -வாங்கபடாத மின்சாரத்திற்கும் ஆண்டுதோறும் பணம் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இது ஒவ்வொறு ஆண்டுக்கும் 6,874 கோடியாகும். 2,000 மெகாவாட் அளவுக்கான தனியார் மின்உற்பத்தியாளர்கள் பயனடையப்போகிறார்கள். தமிழகத்தில் மின்உற்பத்தி நிலையம் இருந்தால் மட்டும்போதும்.நட்ட ஈடு என பணம் வாங்கிக்கொள்ளலாம்.

 • 2008 ல் மின்வெட்டு வந்தபொழுது, அரசு தமிழகத்தில் உள்ள மின்தனியார் உறபத்தியை வெளிமாநிலங்களுக்கு விற்கக்கூடாது என உத்திரவிட்டது. ஜி. ஒ. 10 நாள் 27/02/2009.
 • இதனைச் சாதகமாக்கிக் கொண்ட இத்தனியார்கள் யூனிட் ரூ.1.76 விலைக்கான மின்சாரத்தை ரூ 6.70 க்கு விற்றார்கள்.
 • இதே காலத்தில் பிற மாநில மின்சாரம் தமிழக எல்லைக்கு கொண்டுவர யூனிட்க்கு ரூ0.75 ஆகும் வழித்தடச்செலவு உட்பட அடக்க விலை யூனிட் ரூ4.00 க்கும் குறைவே..
 • இம்மின்சாரம் ஓராண்டுக்குள்ளன குறுகியகால கொள்முதலாகவே செய்யப்பட்டன..
 • 2012-13 களில் நீண்டகாலம்,(15 ஆண்டு) இடைக்காலம் (5ஆண்டு) என 3830 மெகாவாட் வாங்க ஒப்பந்தத்தினை மாநில அரசு போட்டது.
 • இத்துடன் 2011 ல் வரவேண்டியநிலையங்களும் 2014 ன் இறுதியில் உற்பத்தி துவங்கின.
 • 2014 ல் உற்பத்தியும்கூடியதால் இத் தமிழகத்தனியார் மின்சாரத்திற்கு சந்தையில்லாது போயிற்று. 2014ல் பல மாதங்கள் 30 சதத்திற்கு குறைவான உற்பத்தியையே விற்க முடிந்தது
 • தற்போது ஜி.ஒ 10 க்கான தேவையும் ஏதும் இல்லை. அரசு இதனை ரத்து செய்திருக்க வேண்டும்.
 • இதனை ரத்து செய்ய வேண்டுமென வழக்கு வந்த பொழுது அரசு ஏற்கவில்லை.
 • உடனே மின்உற்பத்தியாளர்கள் இழப்பீடு கேட்டு ஒழுங்கு முறை ஆணையத்தில் வழக்கு தொடுத்தனர்.தங்களது உற்பத்தி திறனில் 80 சததிற்கனா அளவுக்கு இழப்பீடு கோரியுள்ளதாக அறிய முடிகிறது.
 • நீண்ட கால, இடைகால கொளமுதல் விலையான யூனிட் ரூ4.91 இழப்பீடாக கோரியுள்ளனர். மின்துறை அமைச்சர் அறிக்கைபடி 75,000 மெகாவாட் உற்பத்திக்கு சந்தையின்றி இருக்கிறது. சந்தை விலை ரூ3.00 கீழாகவே உள்ளன
 • 2008 தொடங்கி இதுவரை 30 க்கு மேற்பட்ட வழக்குகளை இத் தனியார்கள் தொடுத்துள்ளனர்.இவையனைத்தும் ,அடிப்பதுபோல் அடிப்பதும், அழுவதுபோல் அழுவதும் என்ற தோரணையே.
 • இந்த இழப்பீட்டு வழக்கும் அது போன்றதே.
 • 75,000 மெ.வா. சந்தையில்லை யென்று தெரிந்த போதும், தமிழகத்தின் தேவை யும் இல்லாத பொழுது அரசு இவர்களை தமிழகத்திற்குள்ளேயே அடைக்க வேண்டிய அவசியமில்லை.வெளி மாநிலங்களில் இவர்கள் மின்சாரம் ரூ3.00 க்கும் குறைவாகவே விற்க முடியும்.
 • கடந்தகாலங்களைப்போலவே மாநிலத்திறகுவெளியே கொண்டுபோகமுடியவில்லை ஆகவே…… என்ற நிலை பாட்டை இப்பொழுதம் பயன் படுத்தப்படுகிறது.
 • இந்தியச்சந்தையில் ரூ3.00 க்கு கூடவிற்கமுடியாத மின்சாரத்த்திற்கு உற்பத்தி செய்யாமலேயே ரூ4.91 கிடைக்க வழிசெய்யும் யுக்தியே
 • அதானி சூரிய ஒளி மின்சாரத்திற்கு அரசின் ஆணைக்கு இணங்கி உத்திரவிட்டது போல் ஒழுங்கு முறைஆணையம் இந்த வழக்கிலும் உத்திரவை. இடும் என்றே நம்பலாம்.
 • வழங்கப்படும் இழப்பீட்டில் அரசியலுக்கான மூலதனமும்இருக்கும்.
 • 2000 மெகாவாட் 14,000 மில்லியன் யூனிட் ரூ 4.91 விலையில் ஆண்டுக்கு 6,874 கோடியாகும். ஏற்கனவே வாரியத்தின் ஆண்டு நட்டம் 12,600 யாக இருக்கிறது.மக்கள் மன்றமே இதற்கு தீர்ப்பளிக்க வேண்டும்

சா.காந்தி.

Author

pesot

Related Posts

Comments

 1. MURUGESAN M.    

  Sir, No media, public has give interest to this matter. The public money goes to the private person pocket. Public are unknowingly loss their money. They are in the Viskey bottle and TV serial. Please post more such type of awarness information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 12 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>