shadow

ஒபாமாவும், மோடியும் எட்டிய அணுஉலை பற்றி ஒப்பந்தம் இதுவரை மறைக்கப்பட்டு வந்தது. புதுடெல்லி தேர்தல் முடிந்தவுடன், எட்டப்பட்ட ஒப்பந்தம் பற்றியச்செய்திகளை வெளியிட்டிருக்கிறது நடுவன அரசு. வெளிப்படைத் தன்மை பற்றி பேசப்பட்ட அரசின் செல் இதுதான். தேசிய விடுமுறையான 25 டிசம்பரில், நல்ல அரசாட்சி (Good Governce day)கொண்டாடியது போலத்தான்.

இந்த அணுஉலை ஒப்பந்தத்தில் மையப்புள்ளி விபத்து காலத்தில் நட்டஈடு அணுஉலை தயாரிப்பு நிலையத்தின் பொறுப்பு பற்றியதுதான். மிகவும் பரப்புரை செய்யப்பட்ட இந்நதியாவின் இந்தச் சட்டம் கடுமையனதல்ல.60,000 கோடி மூலதனமுள்ள அணுஉலைகள் மத்தியில் வெறும் 1500 கோடி உயர் வரம்பு நட்ட ஈடு. அதுவும் ஒரு லட்சம் உயிர்களை பலிவாங்கிய –வாங்கிக்கொண்டிருக்கும் போபால் நச்சுபுகை விபத்துக்கு பின்னர் ஏற்பட்ட விழிப்புணர்வு. இன்று அன்னிய மண்ணில், இந்தியர்கள் நட்டஈடு கேட்டு வழக்கிட முடியாது என்பது தான். சந்தையே உலகமயமாகும் போது, மக்களின் இழப்புக்கு மட்டும் எப்படி எல்லைக்கோடு பொருந்தும். உலகயக்கொள்கை இல்லாத காலத்திலேயே, அன்னிய நிறுவனங்கள் பொறுப்பாகும்பொழுது, இன்று ஏன் இல்லை.

அறிவுசார் உரிமைச்சட்டம் போலவே இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியச் சட்டங்களை மோடி அரசு அமெரிக்க அரசின் அழுத்ததிற்கு பணிந்து தூக்கிவீசிவிட்டது. இது இந்திய மக்களுக்குச் செய்த துரோகமாகும். எதிர்கட்சியாக இருந்தபோது ஆர்பரித்து இனற்ய ஆளும் கட்சி, இனறு அதே கெள்கையைப் புறக்கணித்துள்ளது.

அறிவுசார் கண்டபிடிப்பு, னி உரிமையானால், அந்த அறிவுசார் பொருள்களின் இழப்புக்கு எப்படி மக்கள் பொறுப்பாக முடியும். சந்தை சக்தியே விலையை நிர்ணயிக்கும்பொழுது இழப்பீடு மட்டும். அரசு பொறுப்பா? முதுகெலும்பு இல்லாத அரசு மட்டும்தான் இது போன்ற ஒப்பந்தங்களைச் செய்ய முடியும். இந்திய அணு சக்தித்துறைதான். அமரிக்காவின் அணு உலைகளை இயக்கப்போகிறது.

2010ல் ஏற்படுத்தப்பட்ட அணு உலை விபத்தில் நட்ட ஈடுபற்றியச் சட்டம் 2005 அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுதத் முட்டுக்கட்டையானது. 11/3/2011 அன்று ஜப்ப்னில் ஏற்பட்ட புகுமா விபத்து இந்தியாவின் நிலைப்பாட்டை மேலும் கடுமையாக்கியது. ஜப்பான் விபத்து 1.5 லட்சம் மக்களை இடமாற்றம் செய்ய வேண்டிவந்தது. 200 பில்லியன் டாலர் (சுமார் 12 லட்சத்து 20 ஆயிரம் கேடி) செலவை எட்டியது. நாளைய விபத்து என்று ஒன்று வந்தால், இந்திய அரசு அதில் யார் ஆட்சியில் இருந்தாலும், மக்களை கைகழுவிவிட்டு விடுவார்கள். போபால் சோகமும், அன்னிய மருந்து நிறுவனங்கள் நம் நாட்டு ஏழை மக்கள் மீது புதிய மருந்துகளை பரிசோதிக்கும் உரிமையையும் வழங்கும் இந்த அரசுகளா, மக்களை காப்பாற்றுவார்கள்.

இந்திய அமெரிக்க அணு உலை ஒப்பந்தம் 2008க்குப் பின்னர் முன்று முட்டுக்கட்டைகளைச் சந்தித்தது. அமெரிக்க 2012 ல், அணு உலைக்கு எரிபொருள் தநத்வர்களை ஆரம்பத்திலிருந்த கடைசி வரை (தொட்டியிலிருந்து காடு வரை) பரிசீலிக்க வேண்டுமென்றது.2008 ஒப்பந்தம் சர்வதேச அணு மையம், 14 உலைகளை பார்வையிடும் உரிமை மட்டுந்தான் ஒப்பந்தமென மறுத்து வந்தது. இரண்டாவது விபத்து காலத்தில், நட்ட ஈட்டை விபத்துக்கு காரணமான நிறுவனத்திடமிருந்து வசூலிப்பது, இந்த சட்ட ரைவ. அணு உலை தயாரிப்பாளர்களை மேலும் அதிக பாதுகாப்பு வரம்புகளை கைவைக்குமென்று எரிர்பார்க்கப்பட்டது. இன்று இந்த பிரிவுக்கு இணையாக இந்திய அரசு காப்பீடு நிறுவனங்கள் காப்பீட்டைச் செய்யுமென்று எட்டப்பட்டது. 1500 கோடியில்750 கோடி காப்பீட்டு நிறுவனம் மூலம் கிடைக்கும். அதுவும் அரசு காப்பீடு நிறுவனங்கள. மூன்றாவதாக பாதிக்கப்பட்டோர். நிறுவனங்களுக்கு எதிராக இழப்பீட்டுகக்க வழக்கு தொடுககும உரிமை. இதனைத்தான் அரசு கங்கையில் தர்பணம் செய்துவிட்டது.

செப்டம்பரில் அமெரிக்க பயணத்தின் போது, அணு உலை ஒப்பந்தம் குறித்து அமைக்கப்பட்ட இருதரப்பு குழுவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. லணட்ன மாநகரில் இதில் எட்டப்பட்டதே இந்த “Break through” மோடி ஒபாமா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மோடி சொன்னார்:”Moving towards commercial co-operation consistent with our law, our international legal obligations, and technical commercial viability” .

இந்திய அணு உலை நட்ட ஈட்டுச்சட்டம் 46, அன்னிய மண்ணில் வழக்குத் தொடுக்கும் உரிமையை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கயிது. நாடாளுமன்றம் இயற்றியச் சட்டம். பிரதமருக்கு இதை தூக்கியெறியும் அதிகாரம் உண்டா? நாம் யாரைத் தேர்ந்தெடுத்தோம். நமது பிரதநிதியையா? அல்லது அமெரிக்காவின் பிரதிநிதியையா?

இன்று புதுடெல்லி தேர்தல் முடிவு நாளை இந்திய தேர்தல் முடிவாகக் கூடும்.

 

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 4 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>