shadow

அதானி குழுமத்துடன் 648 மெகாவாட் சூரியஒளி மின்சாரத்தினைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தினை அரசு செய்து கொண்டிருக்கிறது. மரபுசராமின்சாரம் மூலம் தமிழகத்தின் மின் பற்றகுறையைத் தீர்க்கபோவதாக அரசு சொல்கிறது. இது உண்மைதானா என்பதனை ஆய்வு செய்வதுதான் நம் நோக்கம்..முதலிலேயே ஒன்றை வலியுறுத்திவிடுவது நம் கடமையாகும். நாம் மரபுசார மின்னுற்பத்திக்கு எதிரனவர்கள் அல்ல. மாறக நாம் அதன் பயன் பாட்டை வலியுறுத்துகிறோம்; வற்புறுத்துகிறோம்.

இது 648 மெ.வா. 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம். ஒருயூனிட் ரூ7.01 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது..அதானி குழுமம் 4536 கோடியை முதலீடு செய்ய போவதாக செய்திகள் சொல்லுகின்றன. அதாவது ஒரு மெ.வா.க்கு ஏழு கோடி மூலதனச் செலவாகிறது. இதில் 3175 (70%) கோடியை கைமுதலீடாகவும் எஞ்சிய பகுதி கடன் என்கின்றனர். ஒரு மெ.வா.க்கு ஓர் ஆண்டில் 15லட்சம் யூனிட் (1.5 மில்லியன் யூனிட்) உற்பத்தியாகும் என்று கணக்கிடப்படுகிறது. ஒரு ஆண்டில் மட்டும் 972மில்லியன் யூனிட் (97.2 கோடி)யை அரசு இந்த குழுமத்திடமிருந்து கொள்முதல் செய்யவிருக்கிறது.ஒரு மெகாவாட்க்கு செலவிடப்படும் ஏழு கோடி ரூபாய் மூலதனம் ஆண்டுக்கு 1.05 கோடி வருமானத்தை தரும். இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு தோரயமாக 4000 ஏக்கர் நிலம் தேவை படக்கூடும். ராமநாதபுரம் மாவட்டம் ,கமுதியில் இது அமையவிருக்கிறது.

2012 ல் அரசு சூரிய மின் கொள்கையினை அறிவித்தபோது இங்கு 100 மெ.வா.சூரிய மின் பூங்கா அமைக்க போவதாக நிலங்களை அரசு கையகப்படுத்திருக்கிறது. இந்த நிலங்கள் அதானி குழுமத்திற்கு தரப்பட போகிறதா என்பது தெரியவில்லை.ஏக்கர் ஒரு லட்சத்திற்கு வாங்கப்பட்டதாக செய்திகள் முன்னதாக இருந்தது. ராசி கிரின் எர்த்’’ என்ற நிறுவனமும் அரசும் சேர்ந்து இந்த பூங்காவை அமைப்பதாக இருந்தது.

மின்சாரச்சட்டம் 2003_ சூரியமின்சாரம் போன்று _மரபுசார மின்சாரத்தினை மின் வினியோக நிறுவனங்கள் வாங்கி பயன் படுத்த வேண்டுமெனவும், ஆண்டு உபயோகத்தில் இந்த மின்சாரத்தின் அளவை ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கவும் சொல்லுகிறது.2012 ல் அரசு சூரிய மின் கொள்கை அறிவித்தபிறகு பல வழக்கு களுக்குபின் இந்த அளவை 0.25% என ஆணையம் நிர்ணயித்தது. இதனை ஒரு விழுக்காட்டிற்கு உயர்த்த ஆணையம் தற்போது நடவடிக்கை எடுத்துவருகிறது.நிதியாண்டு 2016 ல் தமிழகத்தின் மின் தேவை 92,000 மில்லியன் யூனிட்டாக இருக்கும் என்று எதிர் பார்க்கபடுகிறது ஒரு விழுக்காடு என்ற நிலையில் வாரியம் 920 மில்லியன் யூனிட் (92 கோடி) சூரியமின்சாரம் வாங்க வேண்டியிருக்கும். அதானி குழுமத்துடன் மற்றவர்களுடன் மின்வாரியம் செய்து கொண்ட மொத்த சூரியமின்சாரத் திறன் 1058 மெ. வா ஆகும். ஆக 920 மி.யூ. பதிலாக 1587 மி.யூ டை.ரூ7.01 க்கு வாரியம் வாங்கும்.

2010 ஆண்டில் சூரிய மின்சாரதின் விலை என்பது யூனிட் ரூ18 ஆக இருந்தது. இன்று படு வேகமாக குறைந்து 5.86 க்கு வந்து விட்டது. உலக அளவில் சூரிய தகடுகளின் தேவை வெகுவாக குறைந்து விட்டது. சூரிய மின் உற்பத்தியை முன்னெடுத்த ஜெர்மன், ஸ்பெய்ன், இத்தாலி,செக்கோஸ்லோவகியா போன்ற நாடுகள் தற்போது பின் வாங்கி விட்டன,சீனா, ஜெர்மன் நாடுகளில் சூரியதகடு உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் திவலாகியுள்ளன .இன் நிலையில்தான் இந்தியா ஒரு லட்சம் மெ.வா. சூரிய்மின்சாரத்திற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. தகர்ந்து கொண்டிருக்கும் இந்த அன்னிய நிறுவனங்களுக்கு இது ஒர் இன்ப அதிர்ச்சியாகவே அமைந்திருக்கும்.( நடுவன அரசின் இலக்கு எட்ட முடிந்ததல்ல.இதனைத் தனியாகப் பார்ப்போம்.) அதனால்தான் ஆணையம் சூரியமின்சாரத்தின் விலையை மட்டும் ஒவ்வொறு ஆண்டுக்கும் மாற்றிட விதியினை வகுத்துள்ளது.

முன்னே சொன்னதுபோல இந்த கொள்முதல் விலை யூனிட்க்கு ரூ1.15 அதிகமாக இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ 5.50 என்று இருக்கிறது. இங்கும் அதானி குழுமம் வெறும் 40 மெ.வா. க்கு மட்டுமே நிலையத்தை அமைத்துள்ளது எதிர்காலத்தில் இந்தவிலை மேலும் குறையக்கூடும்.தமிழக ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கானது. இன்றய சந்தைவிலைக்கே கூடுதலாக கொடுக்கும் விலையைத் தான் 25 ஆண்டுகளுக்கும் கொடுக்கவேண்டும்.ஒவ்வொறு ஆண்டும்111.72 கோடி யை கூடுதலாக அதானி குழுமத்திற்கு தரப் போகிறோம். எதிர் காலத்தில் இந்தவிலை குறைந்தால் இது மேலும் கூடும். 25 ஆண்டுகளில் 2793 கோடியை தமிழகம் கூடுதலாக தர வேண்டியிருக்கிறது. இதற்கான வட்டி யையும் சேர்த்தால்,25ஆண்டுகளில் இக் கூடுதல்விலை இரண்டரை மடங்காகும். அதாவது 6982.கோடியாக இருக்கும்.அதானியின் மூலதனத்திற்கு மேலே இருக்கும்.

இன்று இதனை வாங்க வேண்டிய எந்த அவசியமும் இல்லதா பொழுது ஏன் இந்த கொள்முதல்??

ஏழு ரூபாய்க்கு வாங்க படும் மின்சாரம் பயனீட்டாளர் முனைக்கு வரும் போது ரூ10.50 ஆக மாறும்.

மரபுசார மின்சாரத்தினை பயன் பாட்டுக்கு கொண்டு வர கொஞ்ச கட்டண உயர்வை ஏற்றுத்தான் ஆகவேண்டுமென்ற சித்தாந்தத்தை அரசு ஒருவேளை முன் வைக்கலாம்.இது சரியானால் சந்தைவிலையை விட அதிகம் தருவதின் காரணம் என்ன? மரபுசார மின்சாரம் என்ற பெயரில் முதலாளிகள் கொள்ளை லாபம் அடிப்பதும் அதனை மக்கள் தலையில் கட்டுவதும் எப்படி நியாயமாகும்.

எல்லாவற்றையும் விட தொழில்நுட்ப ரீதியாக நிறுவப்பட இருக்கும் நிலையத்தின் உற்பத்தியை தமிழகத்தில் பயன் படுத்த முடியுமா என்ற பெரிய கேள்வி க்கு விடையளிப்பார் யாரும் இல்லை. பிரச்னை இதுதான்.

சூரியமின்சாரம் இயற்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காற்றாலை மின்உற்பத்தி காற்றின் வேகத்திற்கு ஏற்ப மாறுவது போல் இந்த மின்சாரமும் சூரிய ஒளிக்கேற்ப வேகமாககூடவும் அதே வேகதில் குறையவும் செய்யும். இந்த உற்பத்தி மாற்றம் வினாடிகளில் இருக்கும். மின்சாரத்தை பெரிய அளவில் சேமிக்க முடியாது.எனவே மாறும் வேகத்திற்கேற்ப மற்ற உற்பத்திகளைக் கூட்டவோகுறைக்கவோ வேண்டும்.ஆனால் மாறும் இம் மின்சாரத்தின் வேகத்திற்கு ஏற்ப வினாடிகளில் இதனைச் செய்ய இயலாது. அப்படிச் சரி செய்யும் பொழுதும் கூட நிலையற்ற இம் மின்சாரம் எதிர்திசையில்மீண்டும் மாறக்கூடும். இந்த காரணத்திலும் செக்கஸ்லாவோக்கியா போன்ற நாடுகள் இம் மின்சார உற்பத்தி யிலிருந்து பின் வாங்கின. மின்சாரத்தின் தேவையும் __ உற்பத்தியும் __ மின் அலையால் (Hertz) கட்டுப்படுத்தப்படுகின்றன. 49.5___50.2 அலைக்குள் மாநிலத்தின் மின் கட்டமைப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும். 50 அலைக்குமேல் இருந்தால் உற்பத்தி_ தேவைக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருளாகும் .50.2 அலைக்குமேலே சென்றால் மாநில மின்கட்டமைப்பு மற்ற மாநிலங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடும் ஆபத்து உண்டு. ஒருவேளை மாநிலமே இருளில் மூழ்க வேண்டியும் வரலாம். அது மட்டுமல்ல. 50.2 அலை வரிசையை எட்டும் போது எந்த மாநிலமும் கூடுதல் உற்பத்தியை பயன் படுத்திக்கொள்ளலாம். அந்த மின்சாரம் இலவசமாகும்.அதற்கு விலையை கோர முடியாது தமிழகத்தின் மின்கட்டமைப்பு 500_ 700 மெ.வா.அளவுக்கு மட்டுமே இந்த நிலையற்ற மின்சாரத்தினை ஏற்க முடியும். ஆனால் நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. தமிழகத்தில் 7440 மெ.வா. காற்றாலை இருக்கின்றன. சூரிய மின்சாரம் போன்றே இந்த உற்பத்தியும்நிலையற்ற மின்சாரமாகும். காற்றாலை மின்சாரத்தை தமிழகம் முழுமையாக பயன் படுத்த முடியவில்லை.இதன் விலையோ யூனிட் ரூ 3.12 தான் இந்த உற்பத்தியை முடக்குவதாக காற்றாலை உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். பல நேரங்களில் 1,200 மெ.வா உற்பத்தி முடக்கப்படுகிறது. அவசர காலத்தில் காற்றாலைகளையாவது உற்பத்திசெய்யாமல் நிறுத்த முடியும். ஆனால் சூரிய மின்சாரத்தில் இது சாத்தியமில்லை. அதானியின் 4000ஏக்கருக்கும் உடனடியாக பந்தல் போட்டு மூட வேண்டும். இது நடக்ககூடியதல்ல.இ ந்த மின்சாரம் கட்டமைப்பில் வீணாகப் போவதற்கே__விலையில்லாமல் போவதற்கே சாத்தியம் அதிகம்.

அப்படியானல் சூரிய மின்சாரத்தினை தமிழகம் பயன் படுத்தவே முடியாதா இந்த வளம் வீணாக வேண்டியது தானா என்ற கேள்வி மிக முக்கியமானது.

இல்லை. இந்த வளம் தமிழகத்தின் பெரிய வரமாகும்.திட்டமிடுதலில் தான் தவறு இருக்கிறது. நாட்டின் எந்த தேவையையும் முதலாளி யிடமிருந்து ஆரம்பிப்பதில் தான் இந்த தவறு இருக்கிறது. மாறாக மக்களிடமிருந்து துவங்கினால் மிகப் பெரிய பயனை நாம் பெறமுடியும்.

2013 ல் தமிழகத்தில் மாதத்திற்கு 50 யூனிட் மின்சாரம் பயன் படுத்துவோர் 89.45 லட்சம் வீடுகளாகும். வாடகை வீட்டில் பொது மின் இணைப்பில் இருப்போரை கணக்கில் எடுத்தால் இது இன்னமும் கூடும். இந்த மின் இணைப்பில் உள்ளோர் பகுதியில்சூரிய தகடுகளை அமைத்து அவர்களுக்கு மின்சாரம் வழங்கலாம்.அவர்கள் வாரிய பொது கட்டமைப்பில் இணைக்கப் படவேண்டியதில்லை. இதற்கு ஸ்டேன்ட் எலோன்(stand alone) என்று பெயர்.சிறிய கிராமமாக இருந்தால் அந்த கிராமத்திற்கே தனியாக மின்கட்டமைப்பை ஏற்படுத்தலாம். இது மைக்ரோ கிரிட் (micro grid) எனப் படும். சூரிய தகடுகளை வீட்டின் கூரையில் கூட அமைக்கமுடியும் .நிலத்தின் பயன் பாடும் குறையும். மாநிலத்தின் கட்டமைப்பிலிருந்து விடுபட்டுவிடுவதால் மின் உற்பத்தியின் ஏற்ற இறக்கங்கள் மாநில கட்டமைப்புக்கு வராது.சிறியயளவிலான உற்பத்திக்கு சேமிப்பு மின்கலங்கள் சாத்தியமாகும். இதில் ஏற்படும் மின் இழப்பு குறித்து கேள்வி எழுப்பபடலாம். இந்த இழப்பும் ,பொது கட்டமைப்பிலிருந்து மின்சாரம் கொண்டு வரப்படும் இழப்பும் ஒன்றாகவே இருக்கும். எனவே புதிய இழப்பு என்று சொல்வதற்கு ஏதுமில்லை.அத்துடன் எளியமக்களுக்கு 24*7 மின்சாரம் வழங்கமுடியும்.சூரியமின்சாரத்தில் இருக்கும் வசதியே சிறு,குறு மின்உற்பத்தி செய்ய முடிவதுதான் .இந்த வசதியை பயன் படுத்தியே திட்டமிடப் பட வேண்டும். முதலாளிகளுக்கு லாபம்சம்பாதிக்கும் சந்தை வாய்ப்பாக இது மாற்றப் பட்டதுதான் இத்தனை துயரத்திற்கும் காரணமாகிறது

பொருளாதார அடிப்படையிலும் அரசுக்கு லாபமானது .89.45லட்சம் வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ரூ1.20 ஆகும்.தற்போது இவர்கள் முனையில் வாரிய மின்சாரத்தின் விலை ரூ6.20 ஆகிறது. அரசின் மானியம் மற்றும் தொழில் ,வணிக கட்டணங்களிலிருந்து ஒரு பகுதி என யூனிட்க்கு ரூ 5 மானியம் வழங்கப் படுகிறது. 89.45 லட்சம் வீடுகள் ஆண்டுக்கு பயன் படுத்தும் மின்சாரம் 5330 மில்லியன் யூனிட்(533 கோடி) ஆகும். மானியசெலவில் ஆண்டுக்கு 533 * 5 = 2667 கோடி மிச்சமும்ஆகும். இந்த தொகையில் ஆண்டுக்கு 388 மெ.வா. சூரியநிலயம் அமைக்க முடியும். 5330 மில்லியன் யூனிட்க்கு செலவிடப்படும் மூலதனம் மானியச் சிக்கனத்தின் மூலமே 10 ஆண்டுகளில் ஈடு கட்டப்பட்டு விடும்.(2667/7= 388 மெ.வாட். 5330/1.5 = 3553 மெ.வாட்.)ஆண்டு மின் கட்டணமான 640 கோடி வருமானமும் குறையாமல் கிடைத்துக்கொண்டிருக்கும். எல்லவற்றிக்கு மேலகா 25 ஆண்டுகளுக்கு இவர்களுக்கு கட்டண உயர்வும் இருக்காது. சமூகத்தின் எளிய மக்களுக்கு தொழில்நுட்பம் இவ்வாறு தான் பயன் பட வேண்டும்.

இது போன்றே ஆண்டுக்கு 12,000 மில்லியன் யூனிட் செலவாகும்20லட்ச விவசாய இணைப்புகளையும் தனித் தனி 5 கிலோவாட் மின் உற்பத்தி நிலைய மாக்கிவிட முடியும்.நடுவன அரசு மானியத்தில் சிறிய அளவில் நடைமுறையிலும் இத்திட்டம் உள்ளது.

அதானி குழுமம் கேரளத்தின் ’’விழிங்ஞம்’’ துறைமுக ஒப்பந்தத்தினை பெற்றுள்ளது. கிழக்கு கடற்கரையில் ஆந்திரத்தின் ’’கங்காவரம்’’ புதுச்சேரி துறைமுகங்களைப் பெருவதில் இதனால் வெற்றி பெற முடியவில்லை. தற்போது எண்ணுர் துறைமுகம் இதன் குறியாக இருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன. நடுவன ஆளும் கட்சிக்கு கேரளமும், தமிழகமும் தீவாக உள்ளது. அரசியல் மூலதனத்திற்கு அதானியா(?) என்ற தமிழக அரசியல் வட்டம் இதனைக்கணிக்கிறது. இதன் பின்னணி பல யூகங்களுக்கு விதை யாக இருப்பது உண்மைதான்.

சா.காந்தி    

Author

pesot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 13 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>